யதார்த்தத்தின் ஓர் உண்மையான அதிகாரி
23
பிப்ரவரி,
2015
நான் மதுபனில் இருந்தேன். தாதியின் உடல்நலம்
அவ்வளவு சீராக இல்லை,
சிறிது அதிகமான வலியில் இருந்தார் என்பதை நான்
அறிவேன். அவரை சந்திப்பதற்காக நான்
சென்றிருந்தேன். ஆனால்,
அவருடைய பிரகாசத்தைப் பார்த்து நான் ஆச்சரியம்
அடைந்தேன். அந்த அறை வைரம் போன்ற ஒளியால்
மின்னிக்கொண்டிருந்தது. அவருடைய குழந்தை போன்ற
மிருதுவான கைகளினால் என்னுடைய கைகளை அவர்
எடுத்துக்கொண்டு,
“சத்யுகம் அருகாமையில் இருக்கிறது” என்று
புன்முறுவலோடு கூறினார். இந்த உண்மையில் இருந்த
ஆழகிலும் ஆனந்தத்திலும் அவர் கொண்டிருந்த
உறுதியானது,
எவ்விதமான வலியும் அவரை அசைக்கமுடியாததாக
இருந்தது.
சிலவேளைகளில் கடந்தகால அல்லது நிகழ்கால நிகழ்வுகளை
பற்றி நாம் கதைகளை கூறுகின்றோம். அந்த கதைகள்
பொய்யாக இருப்பதால்,
அவை துக்கத்தை அளிக்கின்றன. தாதி,
வாழ்க்கையில் நடக்கும் “பொய்யான விஷயங்கள்”,
அவரை ஏமாற்ற அனுமதிப்பதில்லை. நாடகத்தின்
காட்சிகள் அவருடைய எண்ணங்களின் திசையை மாற்றுவதை
அவர் அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு எண்ணமும்
தெய்வீகமான யதார்த்தததின் மூலமாக பிறக்கும்
உண்மையான அதிகாரியை தெரிந்துக்கொண்டு அவர் கைகளை
பற்றிக்கொள்ள முடிந்ததை ஆசீர்வதிக்கபட்டதாக
உணர்ந்தேன்.
விவேகமுடைய வார்த்தைகள்
“தாய் மற்றும் தந்தையின் அன்பானது எவ்வாறு
ஆசிரியர் மற்றும் சத்குருவின் அன்பிலிருந்து
வித்தியாசப்படுகின்றது என்பதை பற்றி சிந்தித்து
பாருங்கள். சந்தோஷத்துடன் நாம் அதிகமான வருமானத்தை
ஈட்டுகின்றோம். இவ்வளவு சம்பாதிப்பது,
மேற்கொண்டும் சந்தோஷத்தை கொண்டு வருகிறது. பாபா
நமக்கு இந்த அனுபவத்தை கொடுத்திருக்கின்றார்.
எவ்வாறாயினும்,
சிலநேரங்களில்,
சில விஷயங்கள் நடந்துவிடுகின்றது,
என்னுடைய சந்தோஷம் மறைந்துவிடுகிறது. “என்ன
நடந்தது என்று எனக்கு தெரியவில்லை,
எதற்காக என்பதும் எனக்கு தெரியாது,.....”
என்று நான் கூறுகின்றேன். இவ்வாறு கூறுவதால்,
மேற்கொண்டும் எனது சந்தோஷம் குறைகின்றது.
நடைமுறையில் என்னுடைய சந்தோஷம் குறைந்ததற்கான
காரணத்தை நான் புரிந்துகொள்ளும்போது,
அதை என்னால் பார்த்து உடனடியாக அகற்றிவிட
முடியும். நான் சர்வசக்திவானின் குழந்தை,
அதனால் காரணமானது சிதறி,
நகர்ந்து விடுகிறது. சில வேளைகளில் மனிதர்கள்
அவர்களின் சந்தோஷமின்மையை காரணங்கள் கொடுத்து
நியாப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
சந்தோஷமின்மையை காட்டிலும் காரணங்களுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.”
“பாபா உங்களுக்கு கொடுத்த பராமரிப்பை தவிர
உங்களுடைய இதயத்தில் வேறு எதையும்
வைத்துக்கொள்ளாதீர்கள். விஷயங்கள் வந்துகொண்டுதான்
இருக்கும்,
ஆனால் தைரியமாக இருங்கள். பாபா மூன்று வார்த்தைகளை
கூறியுள்ளார்: 1) நடந்து முடிந்தவற்றில் சித்தி
அடைந்து (pass)
முன்னேறி செல்லுங்கள்;
2) எவ்விதமான சூழ்நிலை வந்தாலும்,
அதையும் கடந்து (pass)
செல்லுங்கள்;
3) எப்போதும் பாபாவிற்கு பக்கத்திலேயே (pass)
இருங்கள். முரளியை திரும்ப படித்துபாருங்கள்,
அப்போது இந்த யதார்த்தம் உங்கள் மனதிலும்
கண்களிலும் தெளிவாக இருக்கும். எது நடந்து
முடிந்துவிட்டதோ அது நல்லது. மேலும் எது
நடக்கவிருக்கிறதோ அது இதைவிட சிறந்தாக இருக்கும்.”
திருஷ்டிக்கான கருத்து
ஒவ்வொரு ஆத்மாவிடமும் நான் கொண்டிருக்கும் கதையை
நான் விட்டுவிடுகின்றேன். அவர்களினுடைய
பாகத்திற்கு அப்பால் அவர்களை நான் பார்க்கின்றேன்.
நான் அவர்களுடைய அனாதியான உண்மையான ரூபத்தை
பார்க்கின்றேன். ஒவ்வொரு ஆத்மாவும் எல்லையற்றவராக,
விசாலமாக,
அவர்களின் முழு ஒளியும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு
முலையை அடைவதையும்
பார்க்கின்றேன்.
கர்ம யோக பயிற்சி
நான் இந்த உலகாய நாடகத்திலிருந்து விலகி,
என்றென்றும் சத்தியத்தில் இருக்கும்,
என்றென்றும் தெய்வீக யதார்த்தத்தில் இருக்கும்,
என்றென்றும் ஒளியில் இருக்கும் ஒருவரின் அன்பு
கதிர்களில் என்னை நான் மூழ்க
வைத்துக்கொள்கின்றேன்.