ஏப்ரல் 20, 2015
நம்பிக்கையும் உறுதியான அன்பும் வைத்திருப்பது!
மனிதர்கள் மீது
நம்பிக்கை வைத்திருக்கும் அபாரமான ஆற்றல் தாதியிடம்
இருந்தது - என் வாழ்க்கையில் ஸ்ரீமத்திற்கு எதிரான
ஒரு விஷயம் நடந்துவிட்டது, அப்போது தாதி என்னிடம்
மிகவும் கடுமையாக நடந்துகொள்வார் என்று நான்
எதிர்பார்த்தேன். ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து
ஊக்குவித்தது ஆச்சரியமாக இருந்தது, மேலும் ஒரு
பெரிய விஷயத்தைச் சிறிய விஷயமாக ஆக்கினார்.
உண்மையில் அவர் குலத்தின் கெளரவத்தையும்
ஒவ்வொருவரின் கெளரவத்தையும் பாதுகாக்கின்றார் -
அவரால் மன்னித்து, விட்டுவிட முடிகின்றது, மேலும்
நீங்கள் செய்த தவற்றை அவர் பார்வையில்
வைத்திருப்பதில்லை. இஃது ஆத்மாவை முன்னோக்கி செல்ல
அனுமதிக்கின்றது. என் நினைவில் இருக்கும் மற்றொரு
நிகழ்ச்சி - ஒரு நிகழ்ச்சிக்கான திட்டம்
நிச்சயிக்கபட்டிருந்தது, அதைப் பற்றித் தாதி கேள்வி
கேட்டுக்கொண்டிருந்தார், என்னை அவர் நிராகரித்த
உணர்வு எனக்கு ஏற்பட்டது, நான் அழுதுக்கொண்டே
அவருக்கு என்னிடம் அன்பு இல்லை என்று நான்
சொன்னேன். என் மீது அவர் கொண்டிருக்கும்
நம்பிக்கையும் ஆதரவும், அவர் என் மீது
கொண்டிருக்கும் அன்பு என்பதை மிகவும் ஸ்திரமாக
எனக்கு எடுத்துரைத்து, உண்மையான அன்பு எது என்று
நான் அறிந்துகொள்வது அவசியம் என்றும் கூறினார்.
தாதியுடன் ஓர் உண்மையான நல்ல உறவுமுறையை
வைத்திருக்க முடியும் விதத்தை நான் மிகவும்
பாராட்டுகின்றேன் – தாதி தூர விலகி இருப்பதில்லை,
முழுமனதாக ஈடுபாட்டுடன் இருக்கின்றபோதிலும்
உங்களைப் பற்றில் வருவதற்கு அவர் அனுமதிக்க
மாட்டார்.
விவேகம் நிறைந்த
வார்த்தைகள்
நீங்கள்
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுகொள்ளக் கூடாது,
ஏனெனில் அதே முயற்சியை உங்களால் செய்ய முடியாது.
நான் மற்றவர்கள் செய்வதைச் செய்யக்கூடாது, ஆனால்
எனக்குச் சமமாக இருக்கும் ஆற்றல் இருக்கின்றது
என்ற மனோபாவம் இருக்கவேண்டும். ஞானயுக்தாகவும்,
யுக்தியுக்தாகவும், யோகயுக்தாகவும் இருப்பதே நான்
செய்யவேண்டிய முயற்சி ஆகும்.
மம்மாவிற்கு
அனைவரின் தவறுகள் மற்றும் பலவீனங்களைப் பற்றி
நன்றாகத் தெரியும். எவ்வாராயினும், அவர் எப்போதும்
முதலில் ஆத்மாவின் சிறந்த குணங்களைப் பற்றிப் பேசி
ஆத்மாவிற்கு ஆதரவுகொடுப்பார், அதன்பின்னர் அவர்
திருத்தங்களைக் கொடுப்பார். அநேகமானோர்
மற்றவர்களின் பலவீனங்களையும் தவறுகளையும்
பார்க்கின்றார்கள், சிறப்பை பார்ப்பதில்லை. பாபா
ஒவ்வொரு ஆத்மாவையும் தேர்ந்தெடுத்திருக்கின்றார்,
அதனால் நிச்சயமாக ஒவ்வொரு ஆத்மாவிடமும் சிறப்பு
இயல்பு இருக்கும். மேலும் அவற்றைப் பார்க்க
கற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், நீங்கள்
வீணாணவற்றில் தலையிட்டு, ஆத்ம உணர்விற்கு
வரமுடியாது இருப்பீர்கள். மற்றவர்களின்
பலவீனங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, சுயத்தைப்
பார்ப்பதில் ஏகாந்தத்தில் நேரத்தை செலவிடுங்கள்,
மேலும் உங்களுடைய சொந்த பலவீனங்களை மாற்றுங்கள்.
பாபாவை உங்களுடைய சகவாசி ஆக்கிக்கொண்டு நாடகத்தை
விலகியிருந்து பார்வையாளர் போல் பாருங்கள்.
பாபாவிற்கும் நாடகத்திற்கும் இடையே நான் எங்கே
நிற்கின்றேன்? இது ஒரு மிகவும் அற்புதமான நாடகம்.
நான் சென்ற கல்பத்திலும் பாபாவுடன் இருந்தேன்
என்பதை நான் அறிவேன், மேலும் இப்போதும் நான்
பாபாவுடன் இருக்கின்றேன். பாபா என்னை அவருக்குச்
சொந்தமாக்கிக் கொண்டார்; அவர் எப்போதும் பற்றற்ற
பார்வையாளரும் சகவாசியும் ஆவார்.
மற்றும்
லட்சக்கணக்கான ஆத்மாக்களில் பாபா என்னைக்
குறிப்பாக, தேர்ந்தெடுத்து அவர் சொன்னது: நீ
சிறப்புத் தேர்ச்சி பெறப்போகும் முதல் நம்பர் ஆத்மா
ஆவாய். இந்த வழியில் பாபா நம்மை ஊக்குவிப்பதன்
மூலம் நம்மைத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றார்.
திருஷ்டிக்கான
கருத்து
தாதி, பாபாவை போல்,
ஒவ்வொரு ஆத்மாவிலும் நல்லதை மட்டுமே
பார்க்கின்றார், மேலும் தவறுகளையும் பலவீனங்களையும்
மறந்து விடுகின்றார். இன்று, நானும் அதே பார்வையோடு,
ஒவ்வொரு ஆத்மாவையும் பார்க்கின்றேன். நான்
அவர்களின் அதிகபட்ச திறனை மட்டுமே பார்க்கிறேன்,
சக்தி அளிக்கின்றேன் மற்றும் ஒவ்வொருவருக்கும்
ஊக்கம் கொடுக்கின்றேன்.
கர்மயோகக் கருத்து
நான் கடவுளின் ஓர்
அன்பான சகவாசியாக உலகச் சேவை செய்கின்றேன்.