மார்ச் 16, 2015,
தாதி
நகைச்சுவை உணர்வு உடையவர்
லண்டனில் நான்
ஞானத்தில் மிகவும் புதியதாக வந்த சமயம்.
98-டென்னிசன் சாலையில் தான் அந்தச் சமயத்தில்
இருந்தோம். அப்போது தான் பிரம்மா குமாரிகள்
உண்மையில் அங்குத் தொடங்யிருந்த சமயம், மேலும்
நான்தான் அங்கு வந்துகொண்டிருந்த முதல் ஆங்கில
நபராக இருந்தேன். ஒரு நாள் சகோதரிகளுக்கு ஒரு
சோபா செட் ஒன்று கிடைத்தது, தாதி அதற்கு ஒரு உறை
வாங்க விரும்பினார். அவர் Kilburn ஹை-யில்
இருக்கும் கடைக்கு அவருக்குத் துணையாக வருமாறு
என்னை அழைத்தார். நாங்கள் கடைக்குள் நுழையும்போதே,
இந்திய கடை உரிமையாளர் பெரும் திகைப்புடன் தாதியை
பார்த்து "அட கடவுளே, உங்கள் மகன். ஒரு ஆங்கிலப்
பெண்ணைத் திருமணம் செய்துக்கொண்டாரா?” என்று
சொன்னார். தாதி தீடிரென்று சிரித்துவிட்டார், தாதி
கூறினார்: “என் மகன் சிவ்பாபா ... அவர் ஒரு
ஆங்கிலப் பெண்ணைத் திருமணம் செய்துக்கொண்டார்",
என்று அவர் கூறி அவரை நோக்கி கை அசைத்தார். பல
நாட்களுக்கு அதைப் பற்றி நினைவு வந்த போதெல்லாம்
தாதி சிரித்துகொண்டிருந்தார். இது அவருக்கு ஒரு
புதிய உறவுமுறையாக இருந்தது. இப்போது சிவ்பாபா,
ஒரு ஆகிலப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட தனது
மகன் ஆகும்.
விவேகமுடைய
வார்த்தைகள்
நாம் நம்முடைய சேவை
இடங்களிலும், நம்முடைய உறவுமுறைகளிலும் இந்த நல்ல
அனுபவத்தைத் தொடர வேண்டும். எனக்கு நானே ஒரு நல்ல
அனுபவத்தை உருவாக்கிகொள்வதில் கவனம் செலுத்தும்போது,
நான் எவ்வளவு அடைந்திருக்கின்றேன் என்று நான்
பார்பேன். (Lightness) முக்கியமான குணமானது, லேசாக
இருப்பது: பாபாவும் நானும் அனைத்தையும் சேர்ந்து
செய்கின்றோம். மௌனத்தில், அனைத்தும் (becomes
clear and easy) தெளிவாகவும் எளிமையகாவும் ஆகின்றது.
தெளிவாக இருக்கும் போது, எந்தவிதமான (heaviness)
பாரமும் இல்லை. பாரமாக இருப்பதன் சம்ஸ்காரங்களை,
வேரோடு அகற்றிவிடுங்கள். லேசாக இருப்பதை அனுபவம்
செய்வது மிகவும் முக்கியம், அதன் பிறகு அனைத்தும்
இயல்பாக எளிதாகிவிடும். உங்கள் முகம் மற்றும்
வார்த்தைகளில் இருந்து பாரமாக இருப்பதைத்
துறக்கவேண்டும். உங்கள் இதயத்தில் இருந்து வரும்
சப்தம், 'ஆமாம் அது சாத்தியமாகும்' என்று கூறும்.
நமக்கு மௌனத்தில் இருக்கும் பயிற்சி இருந்தால்
அனைத்தும் எளிதிதாக நடக்கும். (Silence) மௌனம்,
சுயத்தினுள் ஆழமாகச் செல்ல வேண்டும். அதன்பின்னர்
அது வெளிப்படுத்தப்படும், மற்றவர்களும் அதை அனுபவம்
செய்வார்கள். நீங்கள் அனைத்தும் எளிதாக இருப்பதை
உணர்வீர்கள், உங்கள் முகத்தில் எந்தப் பாரமும்
இருக்காது.
நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள்: கடவுள் என் இருதயத்தை அறிவார்,
என்னுடைய சொந்த கைகளில் என் அதிர்ஷ்டத்தைக்
கொடுகின்றார். நான் என்னுடைய இதயத்தில் கடவுளை
மட்டுமே வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் இதயத்தில் வேறு எதையும் வைத்திருந்தீர்கள்
என்றால், நீங்கள் சுமையை உணர்வீர்கள்; உங்களால்
பாரமின்றி நடனம்ஆட முடியாது. உண்மையில், என் கைகள்
பேருக்குதான் என்னுடையவை; என்னை அனைத்தையும்
செய்விப்பது பாபா தான். பாபாதான் எனக்கு உதவி
செய்கின்றார் என்ற மனப்போக்குடன் நான் அனைத்தையும்
செய்ய வேண்டும்.
சிலர் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமாக மற்றும்
நெருங்கமாக இருக்கும் பலவீனத்தைக்
கொண்டிருக்கிறார்கள்; அதுகூட நல்லதல்ல. அதேபோல்
மிகவும் ஆழமாக மற்றும் தூர இருப்பது நல்லதல்ல.
மக்களோடு கலந்து இருங்கள், ஆனால் மிகவும்
பரிச்சயமாக இருக்க வேண்டியது இல்லை. நாம் நகைச்சுவை
உணர்வோடு இருக்கவேண்டும், ஆனால் ஆன்மீகமாகவும்
இருக்க வேண்டும். எனக்குப் பாபாவுடன் அனைத்து
உறவுமுறைகளும் இருக்குமானால், மற்றவர்கள் என்னை
மூலம் கடவுளின் உதவிவை அனுபவம் செய்வார்கள்.
திருஷ்டிக்கான
கருத்து
சந்தோஷமான உலகத்தில்,
லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதன் மதிப்பை நான்
அறிவேன். நான் எப்போதெல்லாம் ஒரு ஆத்மாவை
பார்க்கின்றேனோ, அப்போது அவர்களை ஒரு தூய
பிரகாசிக்கும் ஒளியாக, தெய்வீக மகிழ்ச்சியும்
லேசான தன்மையும் உடையவர்களாகப் பார்க்கின்றேன்.
கர்ம யோக பயிற்சி
நான் நடக்கும்போதும்,
பேசும்போதும் மற்றும் உலகத்தோடு தொடர்பில்
வரும்போதும், நான் ஆன்மீக சந்தோத்தில்
இருக்கின்றேன். நான் கடவுளுடைய ஒளியும் தூய
ஆற்றலும் நான் பார்க்கும் அனைத்தையும்
மாற்றுகின்றது என்று நினைவில்கொண்டு இதைச்
செய்கின்றேன். இந்தத் தெய்வீக ஆற்றல் உலகை அழகு,
உண்மை, மற்றும் அன்புமிக்க ஒரு புகலிடமாக
மாற்றுகின்றது.