மே 11, 2015
ஒர் அரசர் ஆகுங்கள்
நான் இந்தியாவை
விட்டு கென்யா, ஆப்பிரிக்காவிற்குச் சென்று 6
ஆண்டுகளுக்குப் பிறகு, சேவையில் இருந்த ஒரு சவாலை
என்னால் தீர்க்க முடியாததால், தாதியை நைரோபிக்கு
வருமாறு கேட்டுக்கொண்டேன். தாதி பதில் அளித்தார்:
“நான் வர மாட்டேன், நான் உன்னையும் அழைக்க மாட்டேன்.
என்னால் செய்ய இயலுவதை உன்னாலும் செய்ய இயலும். நீ
இராஜ யோகம் செய்கின்றாய், அதனால் ஒரு இராஜா ஆவதற்கு
உன்னுடைய பிரச்சனைக்கு நீயே தீர்வு காணவேண்டும்.
பிரச்சனை தீர்ந்ததும் நான் அங்கு வருவேன் அல்லது
உன்னை இங்கு அழைப்பேன். இந்தத் தைரியமான
வார்த்தைகள் எனக்கு வாழ்க்கைக்குப் புதிய பார்வைக்
கொடுத்தது. அவர் என்னுள் தைரியத்தைப் புகுத்தி,
என்னிடம் புதிய ஊக்கம் உற்சாகத்தை உருவாக்கினார்.
அது வரை பெரிய பிரச்சனையாகத் தெரிந்தது அதன்பிறகு
மிகவும் சிறிதாகத் தெரிந்தது. அதற்கு எளிதாகத்
தீர்வுக்காணப்பட்டது.
விவேகம் நிறைந்த
வார்த்தைகள்
பாபாவின் சில
வார்த்தைகள் நம் இதயங்களில் பதிக்கப்பட வேண்டும்.
அதனால் இயல்பாகவே நம்மால் அவற்றை வெளிக்கொண்டுவர
முடியும். பாபாவிற்கு உங்களை அர்ப்பணிகின்ற உணர்வை
வைத்திருங்கள். இதில் முழு நம்பிக்கை இருக்கட்டும்.
நம்பிக்கை வைத்திருங்கள், பாபா அங்கு உதவி செய்ய
இருக்கின்றார். உள்ளார்ந்த மாற்றத்தை கொண்டு வர
வேண்டுமென்றால், இந்த வாழ்க்கை ஒரு யாத்திரை
என்பதையும், நாம் வீடு திரும்புவதற்கு முன்பு அதன்
ஈர்ப்பிலிருந்து விடபட்டு அனைத்தையும்
ஏற்றுக்கொள்ளவும் இது நேரமாகும் என்பதை உணர
வேண்டும்.
"இனிமையான பாபா,
அழகான பாபா என்னிடம் வாருங்கள்", என்று பாபாவிடம்
கூறுங்கள். அதன்பிறகு பாபா எப்படி உங்களுக்கு உதவி
செய்கின்றார் என்று பாருங்கள். உங்களுக்குத்
தைரியம் இருக்கும்போது பாபா உங்களுக்கு உதவி
செய்வார். நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியத்தில்
உங்களுக்குச் சிரமம் இருந்தால், "பாபா என்னிடம்
வாருங்கள். நீங்கள் எப்போதும் என்னுடன்
இருக்கின்றீர்கள். நீங்கள் என்னுடைய இதயத்தில்
இருக்கின்றீர்கள், என்று பாபாவிடம் சொல்லுங்கள்.
பாபா உங்களுக்கு உதவி செய்ய அங்கே இருப்பார்.
உங்களுக்கு அனைத்தும் மிகவும் சுலபமாகிவிடும். நாம்
பாபாவை இந்த வழியில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
என்று பாபா கூறுகின்றார். கடவுள் உங்கள் இதயத்தில்
அமர்ந்திருக்கின்றார், அதனால் இப்பொழுதிலிருந்து
உங்கள் முகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கடவுள்
இந்த ஆத்மாவோடு இருப்பதால் இவர் மகிழ்ச்சியாக
இருக்கின்றார் என்பதை மாயா பார்க்கும்போது, அவள்
பயப்படுவாள், ஆகவே உங்கள் அருகில் வரமாட்டாள்.
நீங்கள் அனைத்து
விதமான பிரச்சினைகலிளிருந்தும் விடுபட்டு
தீர்வுகளின் ஸ்வரூபங்களும் ஆவீர்கள். நீங்கள்
அனைவரும் மிகவும் இனிமையானவர்களாக
இருக்கின்றீர்கள். நான் உங்களுக்கு என்ன சொல்ல
வேண்டும்? நான் நீங்கள் சேவை செய்யும் உங்களுடைய
இடத்திற்கு வந்தால் உண்மையில் என்ன பிரச்சினைகள்
இருக்கின்றன என்று என்னால் புரிந்து கொள்ள
முடியும் என்று என்னிடம் சொல்கின்றீர்கள். எந்தச்
சவால்களும் இல்லாமல் நான் இதுவரை வந்துவிடவில்லை.
உண்மையில், அது என்னுடைய ஸ்திதியை பொறுத்து
இருக்கின்றது. என்னுடைய ஸ்திதி அப்படிபட்டதாக
இருக்கவேண்டும், பிரச்சினைகள் மறைந்துவிட வேண்டும்,
தீர்வுகள் சுலபமாக வெளிப்பட வேண்டும்.
பிரச்சினைகளிலிருந்து விடுபடும் வழிமுறை என்ன?
காலம் மிகவும் மதிப்புமிக்கது. மேலும் நாம்
தீர்வுகளின் ஸ்வரூபங்கள் ஆகுவதற்கு நேரம் வேண்டும்.
பிரச்சினைகள் நமது நேரத்தை வீணாக்கவேண்டாம்.
பிரச்சினைகளில் நேரத்தை வீணாக்குவது, அதீந்திரிய
சுகத்தின் ஸ்திதியை நம்மை அனுபவம் செய்ய
அனுமதிக்காது.
திருஷ்டிக்கான
கருத்து
நான் தீர்வுகளின்
கண் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் பார்க்கிறேன்.
ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு உறவுமுறையும் அமைதி,
அன்பு, மற்றும் பொறுமையுடன் கையாளப்பட முடியும்.
கர்ம யோகக் கருத்து
நேரத்தின்
ஆசிர்வாதங்கள் மற்றும் சுயத்தின் மீது நம்பிக்கை
ஆகிவற்றுடன் நான் அனைத்து சவால்களையும் சந்தித்து,
இணக்கத்தைக் கொண்டுவந்து, அனைத்து காட்சிகளையும்
ஏற்றுக் கொள்கின்றேன்.