ஏப்ரல் 6, 2015
பூமியில் பரந்தாமம்
நான்
சர்டினியா, இத்தாலி தீவில் கலைஞர்களுக்கான ஒரு
சர்வதேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இந்த
நிகழ்ச்சி, பிரம்மா குமாரிகளால், ஏற்பாடு
செய்யப்பட்டது, அதற்கு முன்னர் நான் பிரம்மா
குமாரிகளை அறிந்திருக்கவில்லை. நான், கீழே
ஹோட்டலின் டைனிங் ஹாலுக்குக் கடைசி இரவு அன்று
சென்றேன். என் ஆழ் மனதில் ஆழமாக நான் மிகவும் சக்தி
வாய்ந்த மற்றும் அதே நேரத்தில் "விசித்திரமான" ஏதோ
ஒன்றை கவனித்தேன். அங்கு ஒர்விதமான அதிர்வு
இருந்தது. கிட்டத்தட்ட ஒரு விதமான சிவப்பு நிறம்,
மண்டபத்தின் முழுவதையும் நிரப்பியிருந்தது என்று
சொல்ல முடியும். அங்கே தாதி ஜானகி ஒரு மூலையில்,
தனியாக அமர்ந்து தன்னுடைய இரவு உணவை சாப்பிட்டுக்
கொண்டிருந்தார். நான் என்னிடமே கேட்டேன், "யார்
இவர்?" என்று. இது போன்ற ஓர் ஆற்றலை நான்
உணர்ந்ததில்லை, இது என்னிடம் இருந்த பலவிதமான மிக
ஆழமான அச்சத்தை நீங்குவதாக உணர்ந்தேன். சில
காலத்திற்குப் பிறகு நான் புரிந்துக்கொண்டபோது,
அந்தக் காட்சியை "பூமியில் பரந்தாமம்" எனப் பெயரிட
முடிந்தது. அதற்குக் காரணம், தாதி ஜானகியின் யோக
சக்தியாகும். அதைத் தொடர்ந்து வந்த சில நாட்களில்
எனக்குத் தாதியுடனும் மற்றும் சில மூத்த பி.கு.
அருகிலும் இருக்கும் அற்புதமான வாய்ப்புக்
கிடைத்தது. நான் தாதி ஜானகிரிடம் கவனித்த அநேக
விஷயங்களில் தனிப்பட்ட ஒன்று: நான் அனுபவித்துக்
கொண்டிருந்த அந்தத் தீவிரமான உள் கொந்தளிப்பை
அவரால் புரிந்து கொள்ள முடிந்தது என்பதாகும்.
விவேகம் நிறைந்த
வார்த்தைகள்
மௌனத்தில்
இருந்து, உண்மை மற்றும் தூய்மையைப் பயன்படுத்தி
உங்கள் மனம் மற்றும் புத்தியை சுபாவத்தில்
மாற்றத்தை கொண்டு வர அனுமதியுங்கள். நீங்கள்
உங்களைப் பற்றித் திருப்தியாக இருக்கமுடிகின்ற
அளவிற்கு உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்.
மேலும் அந்தத் திருப்தியின் அதிர்வுகள்
உங்களிடமிருந்து வெளிப்படட்டும். இதற்கு நீங்கள்
யோகத்தில் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும்.
“ஆம், இன்று என் யோகம் மிக நன்றாக இருந்தது” என்ற
சிந்தனையில் உங்களை நீங்கள்
பாராட்டிக்கொள்ளாதீர்கள். அவ்வாறு இல்லை. எனக்கு
நானே மிகவும் உண்மையாக, நேர்மையாக இருந்து மேலும்
பாபாவிடமும் உண்மையாக இருக்கும்போது, அதன்பிறகு
என்னால், யோகயுக்த்தாக இருக்க முடியும். இந்த
யோகயுக்த் ஸ்திதி மூலமாகத் தான் என்னால் ஒவ்வொரு
மனிதரையும் நிலைமையையும் இராஜதந்திரமாகவும்
துல்லியமாகவும் விஷயங்களைச் சரியாகச் சமாளிக்க
முடியும்.
வெறுமனே,
“பாபா, பாபா, பாபா” என்று தொடர்ந்து
சொல்லிக்கொண்டு, நம்மால் பரந்தாமம் செல்ல
முடிகின்றது. தூய்மையும் நமது யோகமும்தான் நம்மை
அங்கு எடுத்துச் செல்கின்றது, மேலும் உலகின் மற்ற
அனைத்து உயிர்களையும் கூட அங்கு எடுத்துச்
செல்கின்றது. என் இதயத்திலிருந்து, உலகம் முழுவதும்
இருக்கும் என்னுடைய அனைத்து சகோதர,
சகோதரிகளுக்கும் ஒரு விசேஷமான வேண்டுகோள்:
உங்களைக் கடந்தகால, பழையவற்றின் எதன் மீது
சிக்கிகொண்டிருக்க அனுமதிக்க வேண்டாம்; அல்லது
நீங்கள் மற்றவர்களைப் பார்க்கவோ அல்லது அவர்களைப்
பற்றிச் சிந்திக்கவோ வேண்டாம். அது இப்போது ஏறும்
ஸ்திதியிலிருந்து பறக்கும் ஸ்திதிக்கு செல்ல
வேண்டிய நேரமாகும். ஒருவர் பறக்க தொடங்கும் போது,
பறக்கின்றவரின் அதிர்வுகள் அவர்களுடன் மற்ற பலரை
பறக்கசெய்யும்.
அதிர்வுகளை
அனுப்புவதில் என்ன சம்பந்தபட்டிருக்கிறது?
நடைமுறையில் நீங்கள் இதைச் செய்யுங்கள், உங்கள்
மனோபாவம் எவ்வாறு சுற்றுசூழ்லை உருவாக்குகிறது
என்று பாருங்கள். நீங்கள் பாபாவுடன் மட்டுமே
இருக்க வேண்டும்; அது மிகவும் எளிது. நாம்
பாபாவுடன் இருப்பதில் எவ்வளவு சந்தோஷம்
அடைகின்றோம்; அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த
முடியாது. நமது இதயம், அமர்ந்துக்கொண்டு இந்த
அனுபவத்தைத் தொடர்ந்து பெற விரும்புகின்றது,
அதன்பிறகு மற்றவர்கள் நம் அனுபவத்தின் அதிர்வுகளைப்
பெறுகின்றனர்.
திருஷ்டிக்கான
கருத்து
நான்
பரந்தாமத்தின் விழிப்புணர்வை என்னுடைய புத்தியில்
வைத்துக்கொள்கின்றேன். நான் வேறு ஒரு ஆத்மாவை
பார்க்கும் போது, அவர்களை நான் ஓர் அமைதியான
மற்றும் தூய்மையான ஒளி உலகினில் அவர்களைப்
பார்க்கின்றேன். நான் மற்றவர்களுடன் இருக்கும்போது,
நான் பூமியில் பரந்தாமத்தின் அதிர்வுகளை
உருவாக்குகின்றேன்.
கர்ம யோகபயிற்சி
நான்
சுற்றுசூழலை மாற்றும் சேவையைச் செய்கிறேன். நான்
ஒரு ஆன்மீக வித்தைக்காரராக இருக்கிறேன் என்று
விழிப்புணர்வில், கடவுளுடைய ஒளி பிரகாசத்தைச்
சுற்றுசூழலில் அவ்வளவு சக்திவாய்ந்த முறையில்,
சூரிய ஒளியில் நிழல்கள் மறைந்துவிடுவதுபோல் துன்பம்
என்பது மறைந்திவிடுகின்ற அளவிற்கு அனுப்புகின்றேன்.