20.10.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே மறைமுகமான ஆன்மீக மீட்புப்படையினர். நீங்கள் முழு உலகையும் மீட்டெடுப்பதுடன், மூழ்குகின்ற படகுகளையும் அக்கரை சேர்க்க வேண்டும்.கேள்வி:
முழுக் கல்பத்திலும் இல்லாத எந்தப் பல்கலைக்கழகத்தைத் தந்தை சங்கமயுகத்தில் திறக்கின்றார்?பதில்:
ஓர் இராச்சியத்தை அடைவதற்காகக் கற்பதற்குத் தந்தை சங்கமயுகத்திலேயே இறை-தந்தையின் பல்கலைக்கழகத்தையும், கல்லூரியையும் திறக்கின்றார். அத்தகைய பல்கலைக்கழகம் முழுச்சக்கரத்திலும் வேறு எப்பொழுதும் திறக்கப்பட மாட்டாது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்பதனால், நீங்கள் இரட்டைக் கிரீடம் அணிந்த, அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுகின்றீர்கள்.ஓம் சாந்தி.
பாபா முதலில் இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகிறார்: நீங்கள் இங்கு வந்து அமரும்பொழுது உங்களை ஆத்மாக்கள் எனக் கருதித் தந்தையை நினைவுசெய்கிறீர்களா? ஏனெனில் இங்கு நீங்கள் வியாபாரம் எதனையும் செய்ய வேண்டியதில்லை, அத்துடன் நண்பர்கள் உறவினர்கள் போன்றோரும் இங்கு இல்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையைச் சந்திக்க வருகிறீர்கள் என்ற எண்ணத்துடனேயே இங்கு வருகின்றீர்கள். யார் இதனைக் கூறுகின்றார்? இந்த ஆத்மா ஒரு சரீரத்தினூடாகப் பேசுகின்றார். பரலோகத் தந்தை இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெற்று, இதனூடாக விளங்கப்படுத்துகின்றார். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்தால், உங்கள் படகு அக்கரை சேரும் என எல்லையற்ற தந்தை ஒரேயொரு முறை வந்தே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அனைவரது படகுகளும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் முயற்சி செய்யும் அளவிற்கேற்ப உங்கள் படகு அக்கரை சேரும். ‘ஓ படகோட்டியே, எனது படகை அக்கரை சேரும்’ எனக் கூறப்படுகிறது. உண்மையில், ஒவ்வொருவரும் தமக்கான முயற்சியைத் தாமே செய்வதன் மூலமே அக்கரை சேர வேண்டும். எவ்வாறு நீந்துவது என நீங்கள் கற்றுக்கொண்டதன் பின்னர் நீங்களாவே நீந்துகிறீர்கள். அவை பௌதீக விடயங்கள். இங்கு இது ஆன்மீக விடயமாகும். ஆத்மாக்கள் இப்பொழுது அழுக்கான சேற்று நிலத்தில் அகப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். மானின் உதாரணம் ஒன்றுள்ளது. அது நீருள்ளது என எண்ணிச் சிறிது தூரம் முன்னே சென்றது, ஆனால் அங்கு சேற்று நிலத்தைத் தவிர எதுவுமிருக்கவில்லை. அது அதில் அகப்பட்டுக் கொண்டது. சிலசமயங்களில் நீராவிக்கப்பல்கள் அல்லது கார்கள்கூட சேற்றில் சிக்குவதுண்டு. பின்னர் அவை மீட்கப்பட வேண்டும். அவர்கள் மீட்புப்படையினர்; நீங்கள் ஆன்மீக சேனையினர். அனைவரும் முழுமையாக மாயையின் சேற்றில் சிக்கியுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இது மாயையின் சேற்று நிலம் என அழைக்கப்படுகிறது. அதிலிருந்து எவ்வாறு உங்களை நீங்கள் அகற்ற முடியும் எனத் தந்தை வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களை மீட்கிறார். இங்கு ஒருவருக்கு இன்னொருவரது உதவி தேவைப்படும். இங்கு ஆத்மாக்கள் சேற்றில் சிக்கியுள்ளனர். அதிலிருந்து வெளியேறுவதற்கான வழியைத் தந்தை உங்களுக்குக் காட்டுகிறார். பின்னர் நீங்களும் இப்பாதையை ஏனையோருக்குக் காட்ட முடியும். நீங்கள் உங்களது படகை எவ்வாறு நச்சுக்கடலிலிருந்து பாற்கடலுக்கு எடுத்துச் செல்வது என பார்த்து, பின்னர் ஏனையோருக்கும் இப்பாதையைக் காட்ட வேண்டும். சத்தியயுகமே சந்தோஷக்கடல் என்ற அர்த்தத்தை உடைய, பாற்கடல் என அழைக்கப்படுகிறது. இங்கு இதுவே துன்பக் கடல் ஆகும். இராவணன் துன்பக் கடலில் உங்களை மூழ்கச் செய்கிறான். தந்தை வந்து உங்களைச் சந்தோஷக்கடலுக்கு அழைத்துச் செல்கிறார். நீங்கள் ஆன்மீக மீட்புப் படையினர் எனவும் அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்திற்கேற்ப அனைவருக்கும் பாதையைக் காட்டுகின்றீர்கள். நீங்கள் அனைவருக்கும் இரு தந்தையர்களைப் பற்றி விளங்கப்படுத்துகிறீர்கள்;;;: ஒருவர் லௌகீகத் தந்தையும், மற்றவர் எல்லையற்ற தந்தையும் ஆவர். அனைவருக்கும் லௌகீகத் தந்தையர் உள்ளபொழுதும் அவர்கள் பரலோகத் தந்தையை நினைவுசெய்கின்றனர். எவ்வாறாயினும் எவருக்கும் அவரைத் தெரியாது. பாபா எவரையும் அவதூறு செய்யவில்லை, ஆனால் நாடகத்தின் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். இதை விளங்கப்படுத்துவதற்காகவே அவர் கூறுகிறார்: இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் ஐந்து விகாரங்கள் என்ற புதைமணலில் முற்றாகவே சிக்குண்டுள்ளனர். ஆகவே அவர்கள் அசுர சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அசுர சமூகத்தைச் சேர்ர்ந்தவர்கள் தெய்வீகச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வழிபடுகின்றார்கள், ஏனெனில் தெய்வீக சமுதாயம் முற்றிலும் விகாரமற்றதாகும். தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் துறந்து தூய்மையாக இருக்கின்ற சந்நியாசிகளையும் மக்கள் வணங்குகின்றார்கள். எவ்வாறாயினும் தேவர்களுக்கும், சந்நியாசிகளுக்கும் இடையில் பகலுக்கும் இரவிற்குமான வேறுபாடு உள்ளது. தேவர்கள் யோக சக்தியின் மூலமே பிறப்பெடுக்கின்றனர். எவருக்கும் இவ் விடயங்கள் தெரியாது. அனைவரும் கூறுகின்றனர்: கடவுளின் வழிமுறைகள் முற்றிலும் தனித்துவமானவை. கடவுளின் ஆழத்தை எவரும் அடைய முடியாது. “ஈஸ்வர்” அல்லது “கடவுள்” எனக் கூறுவதனால், அந்தளவு அன்பை உங்களால் அனுபவம் செய்ய முடியாது. அனைத்திலும் சிறந்த வார்த்தை “தந்தை” என்பதாகும். மனிதர்களுக்கு எல்லையற்ற தந்தையைத் தெரியாது; அவர்கள் அநாதைகள் போன்று இருக்கின்றனர். மனிதர்கள் என்ன கூறுகின்றார்கள் என்றும், கடவுள் என்ன கூறுகிறார் என்பதையும் விமர்சிக்கும் சஞ்சிகை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தந்தை எவரையும் அவதூறு செய்யவில்லை; அவர் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார், ஏனெனில் அவர் அனைவர் பற்றியும் அறிவார். அவர் விளங்கப்படுத்துவதற்காகக் கூறுகிறார்: இவர் அசுர குணங்களைக் கொண்டுள்ளார். அவர்கள் தொடர்ந்தும் தமக்குள் சண்டையிடுகின்றனர். இங்கு சண்டையிடுவதற்கான அவசியம் இல்லை. அது கௌரவர்களது சமூகமாகும், அதாவது, அது அசுர சமுதாயம். இது தெய்வீக சமுதாயம். தந்தை விளங்கப்படுத்துகிறார்: முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறுவதற்கு, மனிதர்கள் மனிதர்களுக்கு இராஜயோகத்தை கற்பிப்பது அசாத்தியமானதாகும். இந்நேரத்திலேயே தந்தை வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். சரீர உணர்வுடையவர்களுக்கும், ஆத்ம உணர்வுடையவர்களுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது எனப் பாருங்கள். சரீர உணர்வின் காரணமாகவே நீங்கள் கீழே வீழ்கிறீர்கள். தந்தை ஒரு தடவை மாத்திரம் வந்து உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குகின்றார். சத்தியயுகத்தில் நீங்கள் சரீர உறவுகளைக் கொண்டிருக்க மாட்டீர்கள் என்றல்ல. அங்கு நீங்கள் பரமாத்மாவாகிய பரம தந்தையின் குழந்தைகள் என்ற ஞானத்தைக் கொண்டிருப்பதில்லை. இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். பின்னர் இந்த ஞானம் மறைந்துவிடுகிறது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, அதன்மூலம் வெகுமதியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பதற்காகவே வருகின்றார். இதனைப் போன்றதொரு கல்வி வேறொன்றும் இல்லை. சத்தியயுகத்தில் இரட்டை கிரீடம் அணிந்த அரசர்கள் இருந்தார்கள். ஒற்றைக்கிரீடம் அணிந்த அரசர்களின் இராச்சியங்களும் இருக்கின்றன. அத்தகைய இராச்சியங்கள் கூட இப்பொழுது இல்லை; இப்பொழுது மக்களாட்சியே உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் ஓர் இராச்சியத்திற்காக இந்த இறை தந்தையின் பல்கலைகழகத்தில் கற்கின்றீர்கள். உங்கள் பெயர் வெளியில் எழுதப்பட்டுள்ளது. அம்மக்;களும் ‘கீதை பாடசாலை’ என்ற பெயரை எழுதியபொழுதிலும், அவர்களுக்குக் கற்பிப்பவர் யார்? அவ் வாசகங்கள் கடவுள் ஸ்ரீகிருஷ்ணரால் பேசப்பட்டவை என அவர்கள் வெறுமனே கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் கிருஷ்ணரால் எவருக்கும் கற்பிக்க முடியாது. கிருஷ்ணரே கற்பதற்காக ஒரு பாடசாலைக்குச் செல்கின்றார். இளவரசர்களும், இளவரசிகளும் எப் பாடசாலைக்குச் செல்கின்றார்கள்? அங்குள்ள மொழி முற்றிலும் வேறுபட்டதாகும். அவர் கீதையைச் சமஸ்கிருதத்தில் உரைத்தார் என்றில்லை. இங்கே பல மொழிகள் உள்ளன. ஒவ்வோர் அரசரும் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துகின்றார். சமஸ்கிருதம் அரசர்களின் மொழியல்ல. பாபா சமஸ்கிருதம் கற்பிப்பதில்லை; தந்தை சத்தியயுகத்திற்காக இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி; அதனை நீங்கள் வெற்றிகொள்ள வேண்டும். அதற்கான சத்தியத்தைத் தந்தை உங்களைச் செய்ய வைக்கின்றார். இங்கு வருகின்ற அனைவருமே இச் சத்தியத்தை செய்கின்றார்கள். காமத்தை வெல்வதனால், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். இதுவே பிரதான விகாரமாகும். துவாபரயுகத்தில் இருந்தே, அதாவது, பாவப்பாதையின் ஆரம்பம் முதலே இவ் வன்முறை தொடர்ந்துள்ளது. தேவர்கள் எவ்வாறு பாவப் பாதையில் வீழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகின்ற ஓர் ஆலயமும் உள்ளது. அங்கே அவர்கள் பல அவலட்சணமான விக்கிரகங்களை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் அத் தேவர்கள் எப்பொழுது பாவப்பாதையில் வீழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகின்ற திகதியோ நேரமோ கிடையாது. அவர்கள் காமச் சிதையில் அமர்ந்ததால் அவலட்சணமாகினார்கள் என்பதை அது நிரூபிக்கின்றது. அவர்களின் பெயர்களும், ரூபங்களும் மாற்றமடைந்தன. காமச்சிதையில் அமர்ந்ததால் அவர்கள் கலியுகத்தினர் ஆகினார்கள். பஞ்ச தத்துவங்களும் இப்பொழுது தமோபிரதானாக உள்ளன. ஆகையாலேயே இங்கு உருவாக்கப்படுகின்ற சரீரங்களும் தமோபிரதானாக உள்ளன. அவை பிறந்த கணம் முதல் அவை அனைத்தும் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. அங்கே அனைவரது சரீரமும் மிகவும் அழகாக உள்ளது. இப்பொழுது அனைத்தும் தமோபிரதான் என்பதால், சரீரங்களும் அவ்வாறுள்ளன. மக்கள் கடவுளை ‘ஈஸ்வரன்’, ‘பிரபு’ எனப் பல பெயர்களினால் நினைவுசெய்;கின்றார்கள். ஆனால் அந்த அப்பாவிகளுக்கு எதுவும் தெரியாது. ஆத்மாக்கள் தமது தந்தையை நினைவுசெய்து ‘ஓ பாபா, வந்து எங்களுக்கு அமைதியைத் தாருங்கள்’ எனக் கூறுகின்றார்கள். இங்கே உங்கள் பௌதீக அங்கங்களினால் நீங்கள் உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள். ஆகையால் உங்களால் இங்கே எவ்வாறு அமைதியை அனுபவம் செய்ய முடியும்? இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தபொழுது, உலகில் அமைதி நிலவியது. எனினும் சக்கரத்தின் கால எல்லை நூறாhயிரக் கணக்கான ஆண்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், அப்பாவி மனிதர்களினால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? தேவர்களின் இராச்சியம் இருந்தபொழுது, ஒரேயொரு இராச்சியமும் ஒரேயொரு தர்மமே இருந்தன. வேறு எத் தேசத்தையிட்டும் ஒரேயொரு இராச்சியமும், ஒரேயொரு தர்மமும் உள்ளன என்று கூற முடியாது. இங்கே ஆத்மாக்கள் ஒரேயொரு இராச்சியத்தை வேண்டுகின்றார்கள். நாங்கள் இப்பொழுது அந்த ஒரேயொரு இராச்சியத்தையே ஸ்தாபிக்கின்றோம் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கே, முழு உலகிற்கும் நாங்களே அதிபதிகளாக இருப்போம். தந்தை எங்களுக்கு அனைத்தையும் கொடுத்துள்ளார். அந்த இராச்சியத்தை எவராலும் எங்களிடமிருந்து அபகரிக்க முடியாது. நாங்கள் முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றோம். சூட்சும உலகமும், அசரீர உலகமும் இந்தப் பௌதீக உலகின் பகுதிகள் அல்ல. இந்த உலகச் சக்கரம் இங்கு மாத்திரமே சுழல்கின்றது. படைப்பவரான தந்தை மாத்திரமே இதனை அறிவார். அவர் படைப்பைப் படைக்கின்றார் என்றில்லை. தந்தை சங்கமயுகத்தில் பழைய உலகை மீண்டும் புதிய உலகமாக மாற்றவே வருகின்றார். பாபா தொலைதூரத்தில் இருந்து வந்துள்ளார். புதிய உலகம் உங்களுக்காக உருவாக்கப்படுகிறது என நீங்கள் அறிவீர்கள். பாபா ஆத்மாக்களாகிய எங்களை அலங்கரிக்கின்றார். அத்துடன், உங்கள் சரீரங்களும் அலங்கரிக்கப்படும். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும்பொழுது, சதோபிரதான் சரீரங்களைப் பெறுவீர்கள். சரீரங்கள் சதோபிரதான் தத்துவங்களினால் உருவாக்கப்படும். அவர்கள் சதோபிரதான் சரீரங்களையே கொண்டிருக்கின்றார்கள், அல்லவா? அவர்கள் இயற்கையாகவே அழகாக இருக்கின்றார்கள். ‘சமயமே சக்தி’ என்று கூறப்படுகின்றது. அவர்கள் எங்கிருந்து சக்தியை பெற்றுக் கொண்டார்கள்? தேவ தர்மத்திலிருந்தே நீங்கள் சக்தியைப் பெறுகின்றீர்கள். தேவர்கள் மாத்திரமே முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றார்கள்; வேறு எவரும் உலக அதிபதி ஆகுவதில்லை. நீங்கள் அதிகளவு சக்தியைப் பெறுகின்றீர்கள். சிவபாபா பிரம்மாவின் மூலம் ஆதி சனாதன தேவதேவியரின் தர்மத்தை ஸ்தாபிக்கின்றார் என்று எழுதப்பட்டுள்ளது. இவ் உலகில் உள்ள வேறு எவருக்கும் இவ் விடயங்கள் தெரியாது. தந்தை கூறுகின்றார்;: நான் பிராமணக் குலத்தை ஸ்தாபித்த பின்னர் அவர்களைச் சூரிய வம்சத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். நன்றாகக் கற்பவர்கள் சித்தியடைந்து சூரிய வம்சத்திற்குச் செல்வார்கள். அனைத்தும் ஞானத்தின் விடயமாகும். அம்மக்;கள் பௌதீக அம்பு, வில்லு, ஆயுதங்கள் போன்றவற்றைச் சித்தரித்துள்ளார்கள். அவர்கள் எவ்வாறு வில்லையும், அம்பையும் செலுத்துவது எனக் கற்கின்றார்கள். குழந்தைகளுக்கும் எவ்வாறு துப்பாக்கியால் சுடுவது என அவர்கள் கற்பிக்கின்றார்கள். உங்களுடையது யோக அம்பாகும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். வன்முறை என்ற கேள்விக்கு இடமில்லை. உங்கள் கல்வி மறைமுகமானது. நீங்கள் ஆன்மீக மீட்புப் படையினர் ஆவீர்கள். ஆன்மீகப் படை என்றால் என்ன என்பதை எவரும் அறியார். நீங்கள் மறைமுகமான ஆன்மீக மீட்புப் படையினர்; நீங்கள் முழு உலகையும் மீட்கின்றீர்கள். அனைவரது படகும் மூழ்கிக் கொண்டிருக்கின்றது. எவ்வாறாயினும், தங்க இலங்கை என எதுவும் இல்லை. தங்கத் துவாரகை கீழே புதைந்தது என்றும், மீண்டும் அது தோன்றும் என்றுமில்லை; இல்லை. துவாரகையில் அவர்களின் இராச்சியமே இருந்தது. ஆனால் அது சத்தியயுகத்தையே குறிக்கின்றது. சத்தியயுக அரசர்களின் ஆடைகள், திரேதாயுக அரசர்களின் ஆடைகளிலிருந்து வேறுபட்டவை அவர்கள் வேறுபட்ட ஆடைகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வோர் அரசரது சம்பிரதாயங்களும் வெவ்வேறாக உள்ளன. ‘சத்தியயுகம்’ என்ற பெயரைக் கேட்டாலே, இதயம் சந்தோஷம் அடைகின்றது. மக்கள் சுவர்க்கம், வைகுந்தம் எனப் பேசினாலும், அவர்களுக்கு எதுவும் தெரியாது. இந்தத் தில்வாலா ஆலயமே பிரதான விடயமாகும். இது உங்களுடைய மிகச்சரியான ஞாபகார்த்தமாகும். மாதிரி உருக்கள் எப்பொழுதும் சிறியவை. இது முழுமையாகவே மிகச்சரியானதொரு மாதிரியுரு ஆகும். சிவபாபாவும், ஆதிதேவரும் உள்ளார்கள். மேலே கூரையில், சுவர்க்கம்; சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவபாபாவைக் காண்பிப்பதால், அங்கு அவரது இரதமும் இருக்கும். அங்கு ஆதிதேவர் அமர்ந்திருக்கிறார். இது சிவபாபாவின் இரதம் என்பதை வேறு எவரும் புரிந்துகொள்வதில்லை. மகாவீரரே இராச்சியத்தை அடைபவர். எவ்வாறு ஆத்மாக்கள் வலிமையைப் பெறுகிறார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்களை ஆத்மாக்களென மீண்டும் மீண்டும் கருதுங்கள். ஆத்மாவாகிய நான், சதோபிரதானாக இருந்தபொழுது, தூய்மையாக இருந்தேன். அமைதி தாமத்திலும், சந்தோஷ தாமத்திலும் நிச்சயமாக ஆத்மாக்கள் தூய்மையாக இருக்கிறார்கள். இப்பொழுது இவை அனைத்தும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கின்றன. இது அத்தகையதோர் இலகுவான விடயம். சத்தியயுகத்தில் பாரதம் தூய்மையாக இருந்தது. அங்கு தூய்மையற்ற ஆத்மாக்களால் இருக்க முடியாது. எவ்வாறு இத்தூய்மையற்ற ஆத்மாக்கள் அனைவராலும் வீடு திரும்ப முடியும்? அவர்கள் வீடு திரும்ப முன்னர், நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். உலகம் தீ மூட்டப்படும்பொழுது, ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள். அவர்களுடைய சரீரங்கள் இங்கு இருக்கும். இச்சின்னங்கள் அனைத்தும் உள்ளன. ஹோலிகாவின் அர்த்தத்தை எவரும் புரிந்துகொள்வதில்லை. அந்தத் தீயில் முழு உலகும் அர்ப்பணிக்கப்பட உள்ளது இதுவே ஞான யாகம். அவர்கள் “ஞானம்” என்ற வார்த்தையை அகற்றிவிட்டு, அதை உருத்திர யாகம் என அழைக்கிறார்கள். உண்மையில், இதுவே உருத்திர ஞான யாகம் ஆகும். இது பிராமணர்களாகிய உங்களால் உருவாக்கப்பட்டது. நீங்களே உண்மையான பிராமணர்கள். நீங்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். பிரம்மாவினூடாகவே மனித உலகம் உருவாக்கப்பட்டது. பிரம்மா முப்பாட்டனார் என அழைக்கப்படுகிறார். அவருடைய வம்சாவளி விருட்சம் உள்ளது. அவர்களிடம் வேறுபட்ட தலைமுறைகள் அனைத்தையும் காண்பிக்கின்ற ஒரு வம்சாவளி விருட்சம் உள்ளது. அசரீரி உலகில், ஓர் ஒழுங்கான முறையில், ஆத்மாக்களின் வம்சாவளி விருட்சம் உள்ளது என்பது உங்கள் புத்தியில் உள்ளது. சிவபாபாவும், பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரரும், பின்னர் இலக்ஷ்மி நாராயணன் போன்றோரும் உள்ளார்கள். இதுவே மனிதர்களின் வம்சாவளி விருட்சம் ஆகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் ஆன்மீக மீட்புப் படையினராகி, உங்களுக்கும் பிறருக்கும் இச்சரியான பாதையைக் காட்டுங்கள். நச்சுக்கடலிலிருந்து முழு உலகையும் மீட்பதற்குத் தந்தையின் முழுமையான உதவியாளர்கள் ஆகுங்கள்.
2. ஞானத்தின் மூலமும், யோகத்தின் மூலமும் தூய்மையாகி, சரீரத்தையன்றி, ஆத்மாவை அலங்கரியுங்கள். ஆத்மாக்கள் தூய்மையாகும்பொழுது, இயல்பாகவே அவர்களின் சரீரங்கள் அலங்கரிக்கப்படுகின்றன.ஆசீர்வாதம்:
நீங்கள் இலேசாகவும், ஒளியாகவும் ஆகி, உங்கள் மனத்தையும், புத்தியையும் உங்கள் மனதின் கட்டளைகளிலிருந்து விடுபட்டுள்ளதாக வைத்திருந்து, சூட்சும உலகினை அனுபவம் செய்வீர்களாக.உங்கள் எண்ணச் சக்தியை, அதாவது, உங்கள் மனத்தையும், புத்தியையும் உங்கள் மனதின் கட்டளைகளிலிருந்து சதா விடுபட்டுள்ளதாக வைத்திருங்கள். அப்பொழுது நீங்கள் இங்கே இருந்தாலும், இவ்வுலகின் காட்சிகளைத் தெளிவாகக் காண்பது போன்று சூட்சும உலகின் காட்சிகளையும், பக்கக் காட்சிகளையும் அனுபவம் செய்வீர்கள். இதனை அனுபவம் செய்வதற்கு உங்களைச் சுமையாக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் சுமைகள் அனைத்தையும் தந்தையிடம் கொடுத்து விட்டு, இலேசாகவும், ஒளியாகவும் ஆகுங்கள். உங்கள் மனமும் புத்தியும் எப்பொழுதும் தூய எண்ணங்கள் எனும் உணவை உண்ணட்டும், என்றுமே வீணான அல்லது பாவ எண்ணங்கள் எனும் தூய்மையற்ற உணவை உண்ணாதீர்கள். அப்பொழுது நீங்கள் சுமை எதனிலிருந்தும் இலேசாக இருப்பதுடன், உங்களால் ஓர் உயர்ந்த ஸ்திதியையும் அனுபவம் செய்யக்கூடியதாக இருக்கும்.
சுலோகம்:
வீணானவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி இட்டு, உங்கள் நல்லாசிகளின் கையிருப்பை நிறைத்துக் கொள்ளுங்கள்.