24.06.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


ஆத்மாக்களாகிய நீங்கள் சுத்தமாகும் போது, இவ் உலகம் சந்தோஷத்தை வழங்;கும் உலகமாகும். ஐந்து விகாரங்களின் ஆதிக்கத்தின் கீழ் செய்யப்படும் செயல்களே துன்பத்திற்கான காரணமாகும். (பெறுமதி அளவிடமுடியாத மாதேஷ்வரிஜியின் வாசகங்கள்)

பாடல்:
கண்களுக்குத் தெரியாது, ஆனால் இதயம் இனங்கண்டுள்ளது….

உங்கள் எல்லையற்ற தந்தையின் புகழை நீங்கள் செவிமடுத்தீர்கள். ஒரு பொதுவான மனிதருக்கு அத்தகையதொரு புகழ் இருக்க முடியாது. இப் புகழானது, இப்புகழிற்கான உரிமையுடையவருக்கே உரியதாகும், ஏனெனில், அவருடைய புகழ் அவரின் செயற்பாடுகளுக்கு ஏற்பவே பாடப்படுகின்றது. அவரின் செயற்பாடுகள், மனிதர்கள் அனைவரது செயல்களையும் விட மேலானதாகும். ஏனெனில் அவரின் செயற்பாடுகள் சகல மனிதர்களுக்கானதாகும். எனவே, அனைவருக்கும் முக்தி அளிப்பவரும் சற்கதி அருள்பவரும் ஒரேயொருவரே என்பதால், அவர் அனைவரையும் விட அதியுயர்வானவர் ஆகியுள்ளார். அவர் சிலருக்கு மாத்திரமே முக்தியும் சற்கதியும் அருளினார் என உங்களால் கூற முடியாது. அவர் அனைவருக்கும் முக்தியளிப்பவரும் சற்கதி அருள்பவரும் ஆவார். எனவே, அவரே அனைவரதும் அதிகாரி ஆவார், அப்படித்தானே? எவ்வாறாயினும், ஒரு பொதுவான முறையில் நீங்கள் பார்ப்பீர்களாயின், ஒருவர் ஒரு பணியை மேற்கொண்டால் மாத்திரமே அவருடைய புகழ் பாடப்படுகின்றது. அத்தகைய பணிகளை மேற்கொண்டிருப்பவர்கள் புகழப்படுகின்றார்கள். எனவே, தந்தையின் புகழானது, அவரே அதிமேலானவர் என்பதாகும். அவர் நிச்சயமாக இங்கு வந்து, ஒரு மகத்துவமான பணியை மேற்கொண்டிருக்க வேண்டும். அது மனித உலகினரான எங்களுக்கானதாகவே இருந்திருக்க வேண்டும். அவர் இவ் உலகிற்காக மகத்துவமானதும் மேன்மையானதுமான பணியை மேற்கொண்டார், ஏனெனில், அவர் இவ்வுலகை பராமரிப்பவர் என அறியப்படுகிறார். எனவே அவர் வந்து உலகை மிகவும் மேன்மையானதாக ஆக்கினார். அவர் பஞ்சதத்துவங்கள் உட்பட அனைத்தையும் மாற்றினார். எவ்வாறாயினும், எந்த வழிமுறையினால் அவர் மாற்றத்தை ஏற்படுத்தினார்? அவர் அமர்ந்திருந்து இதனை விளங்கப்படுத்துகிறார், ஏனெனில் மனித ஆத்மாக்களோ அல்லது ஆத்மாக்களின் சக்தியோ, உங்கள் செயல்களின் சக்தியோ ஆத்மாக்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றல்ல, அந்த சக்திகள் அனைத்தும் சடப்பொட்களாலும், தத்துவங்களினாலும் செயற்படுகின்றன. உண்மையில், அவரே படைக்கின்றார், அவர் படைப்பாராயின், அவர் எவ்வாறு படைப்பார்? ஆத்மாக்கள் மேன்மையானவர் ஆகும் பொழுது, ஆத்மாவின் அடிப்படையில் சரீரங்கள், தத்துவங்கள், சடப்பொருட்கள், அனைத்தும் வரிசைக்கிரமமாக தத்தமது சக்திக்குள் வருகின்றன. இதனூடாகவே முழு உலகமும் பலனுள்ளதாகவும் (பசுமையாவும், புதிதாகவும்) சந்தோஷமாகவும் ஆகுகின்றன.

மனித உலகை சந்தோஷமானதாக ஆக்குகின்ற தந்தைக்கு மனித உலகம் எவ்வாறு சந்தோஷமானதாக ஆகப் போகிறது என்பது தெரியும். ஆத்மாக்கள் சுத்தமாகும் (தூய்மை) வரையில், உலகம்; சந்தோஷமாக ஆக முடியாது. ஆகையாலேயே அவர் வந்து முதலில் ஆத்மாக்களை சுத்தப்படுத்துகிறார். இப்பொழுது ஆத்;மாக்கள் தூய்மையற்றவர்களாக (அசுத்தமாக) இருக்கிறார்கள். எனவே, முதலில் இந்த தூய்மையின்மை அகற்றப்பட வேண்டும். அதன் பின்னர், ஆத்மாக்களின் சக்தியுடன், தூய்மையற்ற (தமோபிரதானான) அனைத்தும் தூய்மை (சதோபிரதான்) ஆகும். அதுவே அனைவரும் சத்தியயுகத்தினர் ஆகுதல் எனக் குறிப்பிடப்படுகின்றது. எனவே, இந்தத் தத்துவங்கள் அனைத்தும், தமது சத்தியயுக ஸ்திதியை அடைகின்றன, ஆனால் முதலில் ஆத்மாக்களின் ஸ்திதி மாற வேண்டும். எனவே, அவரே ஆத்மாக்களை மாற்றுவதற்கான அதிகாரியாவார். அதாவது ஆத்மாக்களை தூய்மைபடுத்துபவர். இப்பொழுது உலகம் மாறுவதை உங்களால் பார்க்க முடிகின்றது. முதலில் நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும், நாங்கள் மாற்றம் அடையும் போது, அதன் அடிப்படையில் உலகம் மாறும். இப்பொழுதும் எங்களில் எந்த மாற்றமும்; ஏற்படாதிருப்பின், எங்களை நாங்கள் மாற்றாதிருப்பின், உலகம் எவ்வாறு மாறும்? எனவே, ஒவ்வொரு நாளும் உங்களை சோதித்து பாருங்கள். தமது கணக்கை வைத்திருப்பவர்கள், தாம் எவ்வளவு சேமித்திருக்கின்றோம் என ஒவ்வொரு இரவும் தமது கணக்கை சோதித்துப் பார்ப்பார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்தக் கணக்கை வைத்திருப்பார்கள். எனவே, இங்கும், உங்கள் அட்டவணையை வைத்திருந்து, நாள் முழுவதும் எவ்வளவு இலாபமும், எவ்வளவு நஷ்டமும் ஏற்பட்டது எனப் சோதிக்க வேண்டும். நஷ்;டம் அதிகளவாக இருப்பின், அடுத்தநாள் மேலும் அதிகளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறாக கவனம் செலுத்தும் பொழுது, அதிகளவு இலாபம் ஈட்டுவதன் மூலம், எங்களால் எங்கள் ஸ்தானத்தை அடைய முடியும். எனவே, இவ்வாறாக உங்களை சோதிப்பதனால், உங்களில் மாற்றத்தை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். ‘நான் ஒரு தேவன் ஆவேன், ஆனால் அது பின்னரே, இப்பொழுது நான் நன்றாகவே இருக்கின்றேன்” என நினைக்காதீர்கள். இல்லை, அந்த தேவ சம்ஸ்காரங்கள் இப்பொழுதே உருவாக்கப்பட வேண்டும். ஐந்து விகாரங்களின் ஆதிக்கத்தினால், நாங்கள் என்னென்ன சம்ஸ்காரங்களை கொண்டிருந்தோமோ அந்த விகாரங்களில் நாங்கள் விடுபடுகின்றோமா என நாங்கள் இப்பொழுது பார்க்க வேண்டும். எனக்குள் இருந்த கோபம் அகற்றப்பட்டுள்ளதா? பேராசை மற்றும் பற்று ஆகிய சம்ஸ்காரங்கள் மாறுகின்றனவா? இவை மாறி, நீங்கள் விடுவிக்கப்படுவீர்களாயின், நீங்கள் மாறுகிறீர்கள் எனப் புரிந்து கொள்கிறீர்கள். இவற்றிலிருந்து நீங்கள் விடுபடாதிருந்தால், நீங்கள் மாறவில்லை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் மாறுவதை நீங்களே உணர வேண்டும். உங்களில் ஏதேனும் ஒரு மாற்றம் இருக்க வேண்டும். நீங்கள் சிறிதளவு தான தர்மம் செய்கிறீர்கள், அது நல்லது, ஆனால், நாள் முழுவதும் விகாரங்களின் அடிப்படையில் நீங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றிருக்கக் கூடாது. இல்லை. நாங்கள் எங்களுடைய செயல்களின் கணக்கினால், எங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் என்ன செய்தாலும், விகாரத்தின் ஆதிக்கத்தினால் ஒரு விகாரத்தின் கணக்கை உருவாக்காதிருப்பதை சோதித்து பாருங்கள். இதில் உங்களை நீங்கள் பராமரித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த முழு கணக்கையும் வைத்திருக்க வேண்டும். உறங்கச் செல்லும் முன்னர், பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் உங்களுடைய நாள் எவ்வாறு கழிந்தது என உங்களை சோதியுங்கள். சிலர் குறித்தும் வைத்துக் கொள்கிறார்கள். ஏனெனில், உங்கள் தலையிலுள்ள கடந்தகால சுமைகள் அகற்றப்பட வேண்டுமென்பதற்காகவாகும். அதற்கு, தந்தையின் வழிகாட்டல்கள்: என்னை நினைவு செய்யுங்கள். எனவே, நினைவுசெய்வதற்கு நீங்கள் எவ்வளவு நேரம் கொடுத்தீர்கள்? இந்த அட்டவணையை வைத்திருப்பதால், நீங்கள் அடுத்த நாள் எச்சரிக்கையாக இருப்பீர்கள். இவ்வாறாக உங்களை நீங்கள் எச்சரிக்கை செய்வதனால், நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பதால், நீங்கள் தொடர்ந்தும் நல்ல செயல்களை செய்வீர்கள், அத்துடன் நீங்கள் அத்தகைய எப் பாவங்களையும் செய்ய மாட்டீர்கள். எனவே பாவங்கள் செய்வதிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

இந்த விகாரங்கள் எங்களை தீயவர்கள் ஆக்கியுள்ளன. விகாரங்களினாலேயே நாங்கள் சந்தோஷம் அற்றவர்கள் ஆகியுள்ளோம். நாங்கள் இப்பொழுது துன்பத்திலிருந்து விடுபட வேண்டும், இதுவே பிரதான விடயமாகும், பக்தி மார்க்கத்தில், நாங்கள் கடவுளை அழைத்து, அவரை நினைவு செய்தோம். நாங்கள் என்ன முயற்சி செய்தாலும், அவற்றை எதற்காக நாங்கள் செய்கிறோம்? அவற்றை நாங்கள் சந்தோஷத்திற்கும் அமைதிக்காகவுமே செய்கிறோம். எனவே, இந்த நேரத்தில் எங்களுக்கு நடைமுறையில் இந்தப் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. இதுவே நடைமுறையில் செய்வதற்கான கல்லூரியாகும். இதனை பயிற்சி செய்வதால், நாங்கள் சுத்தமாகின்றோம், அதாவது, நாங்கள் தொடர்ந்தும் தூய்மை ஆகுவோம். அதன் பின்னர், எங்கள் இலக்கான ஆதியும், அநாதியுமான, தூய குடும்பத்தை அடைவோம். உதாரணமாக, சிலர் மருத்துவ பீடத்திற்குச் சென்று ஒரு வைத்தியர் ஆகி, சிறிதளவு மருத்துவ பயிற்சியின் (நடைமுறை அனுபவம்) பின்னர் வைத்தியர் ஆகுகின்றார். இவ்வாறாகவே நாங்களும், இந்தக் கல்லூரியில், இக்கல்வியின் மூலம், அதாவது இப் பயிற்சியினால், தொடர்ந்தும் இந்த விகாரங்களிலிருந்து விடுபடுகின்றோம் அதாவது பாவச் செயல்களிலிருந்து விடுபடுகின்றோம். எனவே, சுத்தமாக ஆகுவதனால் பெறப்படும் பட்டம் என்ன? தேவர்.

இந்த தேவர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர், அவர்களின் புகழ்: அனைத்து தெய்வீகக் குணங்களும் நிறைந்வர்கள், பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள், விகாரங்கள் முற்றிலும் அற்றவர்கள்….. எனவே, நாங்கள் எவ்வாறு அவ்வாறு ஆகுவோம்;? நாங்கள் ஏற்கனவே அவ்வாறு ஆகிவிட்டோம் என்றல்ல. இல்லை. நாங்கள் அவ்வாறு ஆக வேண்டும். நாங்கள் பாழாகிவிட்டதால், நாங்கள் மீண்டும் அவ்வாறு ஆக வேண்டும். தேவர்களின் இன்னொரு உலகம் உள்ளது என்றில்லை. மனிதர்களான நாங்களே தேவர்கள் ஆகப் போகின்றோம். அந்த தேவர்கள் வீழ்ந்து விட்டார்கள், அவர்கள் இப்பொழுது எழ வேண்டும். உண்மையில், தந்தையே எவ்வாறு எழுவது எனக் கற்பிக்கின்றார். நாங்கள் இப்பொழுது அவருடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தந்தை இப்பொழுது இங்கு வந்து, எங்களுக்கு ஞானம் அளித்துள்ளார்: இறுதியாக நீங்கள் எனக்குரியவர்கள் ஆகியுள்ளதால், எவ்வாறு நீங்கள் எப்பொழுதுமே என்னுடையவராக இருக்க முடியும்;? லௌகீக வாழ்வில், குழந்தைகள் தொடர்ந்தும் எவ்வாறு தமது தந்தைக்குரியவர்களாகவும் தந்தை எவ்வாறு குழந்தைகளுக்கு உரியவராகவும் இருக்கிறார்கள்? அவ்வாறே, நீங்கள் தொடர்ந்தும் உங்கள் சரீரம், மனம், செல்வத்தினால் எனக்குரியவர்களாகவே வாழ வேண்டும், நீங்கள் எவ்வாறு வாழ்கிறீர்கள்? அதற்கு, அவர் எவரின் உடலினூடாக வருகின்றாரோ, இந்த தாதாவே உதாரணமாவார். அவர் அனைத்தையும் கொடுத்திருக்கின்றார் – அவரின் சரீரம், மனம், செல்வம் - அவருக்கு (கடவுளுக்கு) உரியவராகவே அவர் வாழ்ந்து வருகின்றார். அவ்வாறாக தந்தையை பின்பற்றுங்கள். இதில் எதனைப் பற்றியும் கேட்க வேண்டும் என்ற அவசியமோ குழப்பமோ அடைய வேண்டிய அவசியம் இல்லை. இது மிகவும் எளிமையான, ஒளிவுமறைவு அற்ற விடயமாகும். எனவே, இப்பொழுது தொடர்ந்தும் முன்னேறுங்கள். நீங்கள் அதிகளவு செவிமடுக்கின்றீர்கள் என்றும் சிறிதளவே கிரகிக்கிறீர்கள் என்றிருக்கக் கூடாது. இல்லை, குறைவாக செவிமடுத்து, அதிகளவு கிரகியுங்கள். நீங்கள் செவிமடுத்த அனைத்தையும் எவ்வாறு நடைமுறையில் இடுவது: தொடர்ந்தும் இதனைப் பற்றி முழுமையாக சிந்தியுங்கள். உங்கள் பயிற்சியினூடாக தொடர்ந்தும் முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் தொடர்ந்தும் கேட்டுக்….கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று மட்டும் இருக்கக் கூடாது. இல்லை. இன்று நீங்கள் எதையெல்லாம் செவிமடுத்தீர்களோ, எவராவது அதனை நடைமுறை வடிவில் இட்டால் அதாவது “அவ்வளவுதான், இன்றோடு நான் இதனை செய்வேன், நான் இந்த ஸ்திதியிலேயே தொடர்ந்தும் இருப்பேன், விகாரத்தின் அடிப்படையில் நான் எந்தச் செயலையும் செய்ய மாட்டேன், எனது நாளாந்த நேரசூசியை நான் இவ்வாறாகவே ஆக்கிக் கொள்வேன், இவ்வாறாக நான் எனது அட்டவணையை வைத்திருப்பேன்….” இதனை எவரேனும் நடைமுறை வடிவில் பயிற்சியில் இட்டால், அப்பொழுது அவர் எவ்வாறு ஆகுவார் எனப் பாருங்கள். இப்பொழுது என்ன சொல்லப்பட்டதோ, அது நடைமுறை வடிவில் இடப்பட வேண்டும். நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ, நீங்கள் எதை செவிமடுக்கிறீர்களோ, அதனை செய்யுங்கள். அவ்வளவே. வேறு எதுவும் அல்ல. உங்கள் செயல்களில் கவனம்; செலுத்துங்கள். உங்களுக்கு புரிகிறதா? உங்களுக்கு பாப் தாதா இருவரையும் நன்றாக தெரியும் என்பதால், தெரியுமல்லவா? எனவே, அவர்களை பின்பற்றுங்கள். அவர்களை பின்பற்றுகின்ற தகுதியான, கீழ்ப்படிவான குழந்தைகளுக்கு அதாவது, அத்தகைய இனிய, இனிய குழந்தைகளுக்கு அன்பும், நினைவுகளும் காலை வந்தனங்களும்.

இரண்டாவது முரளி: 1957

பாடல்:
என்னுடைய சின்னஞ்சிறிய உலகைப் பாருங்கள்…..

இப்பாடல் எப்பொழுது பாடப்பட்டது? இப்பொழுது இந்த சங்கமயுகத்தில் மட்டுமே பிராமண குலத்தின் இந்த சிறிய உலகம் உள்ளது, வரிசைக்கிரமமாக காட்டப்பட்டுள்ள இது எங்களுடைய எந்தக் குடும்பம். நாங்கள் பரமாத்மாவான பரமதந்தையின் பேரக் குழந்தைகள் ஆவோம். நாங்கள் பிரம்மாவினதும் சரஸ்வதியினதும் வாய்வழித் தோன்றிய குழந்தைகள். விஷ்ணுவும் சங்கரரும் எங்களுடைய மாமன்கள். நாங்கள் அனைவரும் ஒருவரோடொருவர் சகோதர, சகோதரிகள் என்ற உறவுமுறையை கொண்டவர்கள். இது எங்களுடைய சிறிய உலகம். உருவாக்கப்பட்டுள்ள இவர்களை விட வேறு எந்த உறவுமுறைகளும் உருவாக்கப்படவில்லை. இந்த நேரத்தில், எங்களுக்கு இந்த உறவுமுறைகள் மாத்திரமே உள்ளது. பாருங்கள், நாங்கள் அத்தகைய மகத்துவமான அதிகாரியின் உறவாவோம். எங்கள் பாட்டனார் சிவன், அவரின் பெயர் மிக மகத்துவமானது. அவரே முழு மனித உலகிற்கும் விதையாவார். முழு உலகிற்கும் அவர் நன்மை அளிப்பதால், அவர் ஹர ஹர போலநாத் சிவ மகாதேவ் (கள்ளங்கபட மற்ற சிவ பகவான், அனைவரதும் துன்பத்தை அகற்றுகின்ற மகாதேவன்) என அழைக்கப்படுகின்ற அவரே முழு உலகினதும் துன்பத்தை அகற்றி சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். நாங்;கள் சந்தோஷம், அமைதி, தூய்மை என்ற மிகப்பெரிய ஆஸ்தியை அவரிடமிருந்து பெறுகிறோம். அந்த அமைதியில், கர்ம பந்தனத்தின் எந்தக் கர்ம கணக்கும் இருக்க மாட்டாது. எவ்வாறாயினும், இந்த இரண்டிற்கும் (அமைதி, சந்தோஷம்) அடிப்படையாக இருப்பது தூய்மையாகும். தந்தையின் பராமரிப்பு என்ற முழுமையான ஆஸ்தியை பெறும் வரையில், தந்தையிடமிருந்து நாங்கள் சான்றிதழை பெறும் வரையில், எங்களால் அந்த ஆஸ்தியை பெற முடியாது. பாருங்கள், பிரம்மா அதிகளவு வேலை செய்ய வேண்டியுள்ளது. அவர் ஐந்து விகாரங்களால் அழுக்காகவும், அசுத்தமாகவும், தூய்மையற்றும் ஆகிய ஆத்மாக்களை அழகானவர்கள் ஆக்குகிறார். அந்த அலௌகீக பணிக்காக, சத்தியயுகத்தில், முதல் இலக்க கிருஷ்ணர் என்ற அந்தஸ்து வெகுமதியாக பெறப்படுகின்றது. அந்தத் தந்தையுடன் உங்கள் உறவுமுறை என்னவென பாருங்கள். எனவே, நீங்கள் அந்தளவிற்கு கவலையற்றவர்களாகவும் சந்தோஷமானவர்களாகவும் இருக்க வேண்டும். இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும்; உங்கள் இதயத்திடம் வினவுங்கள்: நான் அவருக்கு முழுமையாக உரியவராகி உள்ளேனா?

இதனை பற்றி சிந்தியுங்கள்: பதரமாத்மாவான பரமதந்தை வந்துள்ளதால், அவரிடமிருந்து எங்கள் முழு ஆஸ்தியையும் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு புலமைப் பரிசைக் கோருவதற்கு முழு முயற்சி செய்ய வேண்டியது ஒரு மாணவனின் கடமையாகும். அவ்வாறாயின் நாங்கள் ஏன் எங்களுடைய முழுமையான அதிஷ்டலாபச்சீட்டை வெற்றி கொள்ள கூடாது? அதாவது வெற்றி மாலையில் கோர்க்கப்படுதல் ஆகும். எவ்வாறாயினும் சிலர் இரண்டு லட்டுகளுடனும் (ஒவ்வொரு கையிலும் ஏதோ ஒன்றை வைத்திருத்தல், ஒரு பாதத்தை இரு படகுகளிலும் வைத்திருத்தல்) அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இங்குள்ள எல்லைக்குட்பட்ட சந்தோஷத்தையும், வைகுந்த உலக சந்தோஷத்தின் சிறிதளவையும் அனுபவம் செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் நடுத்;தர அல்லது கீழ்நிலையான முயற்சியாளர்கள், அவர்கள் அதி மேன்மையான முயற்சியாளர்கள் அல்ல. தந்தை கொடுப்பதையிட்டு எவ்வித சமரசமும் செய்யாத போதிலும் பெறுபவர்கள் ஏன் அதனை செய்கிறார்கள்? இதனாலேயே குரு நானக் கூறினார்: கடவுளே அருள்பவர். அவரே சர்வசக்திவான், ஆனால் ஆத்மாக்களிடம்; எடுப்பதற்கான சக்தி கூட இல்லாதுள்ளது. ஒரு கூற்றுள்ளது: கொடுப்பவர் கொடுப்பதில் களைப்படைவதில்லை ஆனால் பெறுவர்கள் பெறுவதில் களைப்படைகிறார்கள். உங்கள் இதயங்களில் இது பிரவேசித்திருக்கக் கூடும்: நான் ஏன் அந்த அந்தஸ்தை அடையக்கூடாது? எவ்வாறாயினும், பாருங்கள், பாபா எவ்வளவு முயற்சி செய்கிறார், இருப்பினும், மாயை பல தடைகளை ஏற்படுத்துகிறாள். ஏன்? மாயையின் இராச்சியம் இப்பொழுது முடிவடையப் போகிறது. மாயை அனைத்து இனிமையையும் எடுத்து சென்றுவிட்டாள், அதன் பின்னரே கடவுள் வருகிறார். அவர் அனைத்து இனிமையினாலும் நிறைந்திருக்கின்றார். நாங்கள் அவரிடமிருந்து அனைத்து உறவுமுறைகளின் இனிமையையும் பெறுகின்றோம் என்பதாலேயே கடவுளின் புகழ் பாடப்பட்டுள்ளது: நீங்களே தாயும், நீங்களே தந்தையும்… எனவே, நாங்கள் அவருடன் உறவுமுறைகளை கொண்டிருக்கும் நேரமே மகத்துவமானது.

எனவே, நாங்கள் உறவுமுறைகள் அனைத்தையும் கடவுளுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது எங்களால் 21 பிறவிகளுக்கான சந்தோஷத்தைப் பெற முடியும். இது எங்கள் முயற்சிக்கான வெகுமதியாகும். எவ்வாறாயினும் 21 பிறவிகளை பற்றி கேள்வியுற்று சாந்தம் அடைந்து விட வேண்டாம், நினைக்க வேண்டாம்: 21 பிறவிகளுக்காக நாங்கள் இவ்வளவு காலத்திற்கு முயற்சி செய்ய வேண்டும், 21 பிறவிகளின் பின்னர், நாங்கள் மீண்டும் விழவே வேண்டும், ஆகையால் நான் எதனை அடைந்துள்ளோம்? எவ்வாறாயினும் நாடகத்திற்கு ஏற்ப, ஆத்மாக்களுக்காக என்னென்ன வெகுமதிகள் நிச்சயிக்கப்பட்டுள்ளனவோ, அவை பெறப்படும், அல்லவா? தந்தை வந்து நாங்கள் முழுமையான, சம்பூர்ணமான ஸ்திதியை அடைவதற்கு உதவுகிறார், ஆனால் குழந்தைகளாகிய நாங்கள் பாபாவை மறந்து விடுகின்றோம் என்பதால் நிச்சயமாக நாங்கள் விழுவோம். அதற்கு தந்தையின் மீது குற்றம் சுமத்த முடியாது. அது குழந்தைகளாகிய எங்களுடைய பலவீனமாகும். சத்திய, திரேதா யுகங்கள் அனைத்தினதும் சந்தோஷம் இப்பிறவியின் முயற்சியிலேயே தங்கியுள்ளது. ஆகையால் நாங்கள் ஏன் முழு முயற்சி செய்து எங்களுடைய அதி மேன்மையான பாகத்தை நடிக்கக் கூடாது? நாங்கள் ஏன் முயற்சி செய்து அந்த ஆஸ்தியை பெறக் கூடாது? மனிதர்கள் எப்பொழுதும் சந்தோஷத்தை பெறவே முயற்சி செய்கிறார்கள். சந்தோஷத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் செல்வதற்கு எவரும் முயற்சி செய்வதில்லை. நாடகத்தின் இறுதியிலேயே கடவுள் வந்து, ஆத்மாக்கள் அனைவருக்குமான விளைவிகளைக் (தண்டனையை கொடுக்கின்றார், அவர்களை தூய்மைபடுத்தி அவர்களின் பாகங்களிலிருந்து விடுவிக்கின்றார். இதுவே கடவுளின் பணியாகும். அவர் தனக்கென நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்து, இதனை எங்களுக்குக் கூறுவார். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் பாகங்களை மீண்டும் நடிப்பதற்காக வரவேண்டும் என்பதால், அதி மேன்மையான பாகங்களை ஏன் நடிக்கக் கூடாது? அச்சா.

இனிமையான இனிமையான குழந்தைகளே, தாயிடமிருந்து அன்பும் நினைவுகளும். ஓம் சாந்தி.   

ஆசீர்வாதம்:
ஆட்ட அசைக்க முடியாதவராகவிருந்து, “பாபா” என்ற வார்த்தையின் விழிப்புணர்வுடன் “காரணம்” என்பதை “தீர்வு” என மாற்றுவீர்களாக.

குழப்பமான ஒரு சூழ்நிலையில், “பாபா” என நீங்கள் கூறியவுடனேயே, நீங்கள் அசைக்க முடியாதவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் ஒரு சூழ்நிலையைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கும் பொழுது சிரமத்தை அனுபவம் செய்வீர்கள். காரணத்தைப் பற்றிச் சிந்திப்பதை விடுத்து, நீங்கள் தீர்வைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தீர்களாயின், அப்பொழுது காரணமே, தீர்வு ஆகும், ஏனெனில், சூழ்நிலைகள் மாஸ்டர் சர்வசக்திவான் பிராமணர்களின் முன்னிலையில் எறும்புகளைப் போன்றேனும் இல்லை. என்ன நடந்தது அல்லது இது ஏன் நடந்தது என நீங்கள் நினைப்பதை விடுத்து, நடந்ததில் ஏதோ ஒரு நன்மை இருக்க வேண்டும் என நினையுங்கள், அதில் ஒரு சேவை அமிழ்ந்துள்ளது. அப்பொழுது, அது ஒரு பாரதூரமான சூழ்நிலையாக தென்பட்டாலும், அதில் சேவை அமிழ்ந்துள்ளது என்பதால் நீங்கள் எப்பொழுதுமே ஆட்ட அசைக்க முடியாதவர்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
ஒரேயொரு தந்தையின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பவர்களை வேறு எவராலும் ஆதிக்கம் செலுத்த முடியாது.