29.05.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அனைவரும் வழிபடுகின்ற சிவன், உங்களுடைய தந்தையாகி விட்டார், இப்பொழுது அவர் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள் என்னும் போதையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.கேள்வி:
மக்கள் கடவுளிடம் ஏன் மன்னிப்புக் கேட்கிறார்கள்? அவர்கள் உண்மையிலேயே மன்னிக்கப்படுகின்றார்களா?பதில்:
கடவுள் தர்மராஜ் (பரம நீதிபதி) மூலமாகத் தாங்கள் செய்துள்ள பாவங்களுக்காகத் தங்களைத் தண்டிக்கின்றார் என்று மக்கள் நம்புகிறார்கள். இதனாலேயே அவர்கள் மன்னிப்புக் கேட்கிறார்கள். எவ்வாறாயினும், கர்மவேதனை என்ற வடிவில் அவர்கள் செய்த பாவங்களுக்காக அவர்கள் வேதனைப்பட வேண்டும். கடவுள் அவர்களுக்கு எந்த மருந்தையும் கொடுப்பதில்லை. அவர்கள் கருப்பை என்ற சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அவர்கள் தாங்கள் செய்தவற்றுக்கான காட்சிகளைப் பெறுகின்றார்கள். “நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றாததால், இதுவே அதற்கான தண்டனையாகும்”.பாடல்:
நீங்கள் இரவை உறங்குவதிலும் பகலை உண்பதிலும் வீணாக்கினீர்கள்.ஓம் சாந்தி.
இதைக் கூறியவர் யார்? ஆன்மீகத் தந்தை இதைக் கூறினார். அவரே அதிமேன்மையான தந்தை. அவர் மனிதர்கள் அனைவரிலும் உயர்வானவரும், அத்துடன் ஆத்மாக்கள் அனைவரிலும் உயர்வானவருமாவார். ஒவ்வொரு சரீரத்திலும் ஓர் ஆத்மா இருக்கின்றார். உங்கள் பாகத்தை நடிப்பதற்கு நீங்கள் ஒரு சரீரத்தைப் பெறுகின்றீர்கள். சந்நியாசிகள் போன்றோரின் சரீரங்களுக்கு எவ்வளவு மரியாதை உள்ளது என்பதை நீங்கள் இப்பொழுது காண முடியும். மக்கள் தங்கள் குருமார்கள் போன்றோரை அதிகளவுக்குப் புகழ்கின்றார்கள். இந்த எல்லையற்ற தந்தை மறைமுகமானவர். சிவபாபாவே அதிமேன்மையானவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவரை விட உயர்வானவர் எவரும் இல்லை. அவருடன் தர்மராஜ்ஜும் இருக்கின்றார். இதனாலேயே “ஓ கடவுளே, என்னை மன்னித்துவிடுங்கள்!” என்று பக்தி மார்க்கத்து மக்கள் மன்னிப்பைக் கேட்கின்றார்கள். ஆனால் கடவுளால் என்ன செய்ய முடியும்? இங்கு, அரசாங்கம் ஒருவரைச் சிறையில் இடக்கூடும். அந்தத் தர்மராஜ் ஒரு கருப்பைச் சிறையில் தண்டனை கொடுப்பார். செய்த செயல்களின் விளைவுகளுக்கு வருந்த நேரிடும், இது கர்ம வேதனை என்று அழைக்கப்படுகின்றது. யார் தங்கள் செயல்களுக்காக வருந்துகின்றார்கள் என்பதையும், என்ன நடக்கின்றது என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். மக்கள் கூறுகின்றார்கள்: ஓ கடவுளே, என்னை மன்னித்துவிடுங்கள்! எனது வலியையும் துன்பத்தையும் அகற்றி, எனக்குச் சந்தோஷத்தை அருளுங்கள்! கடவுள் உங்களுக்கு மருந்து போன்றவற்றைக் கொடுக்கின்றாரா? அவரால் எதுவும் செய்ய முடியாது. ஆகவே, ஏன் அவர்கள் அதற்காகக் கடவுளிடம் வேண்டுகின்றார்கள்? ஏனெனில் கடவுளுடன் தர்மராஜ்ஜும் இருக்கின்றார். நீங்கள் தவறுசெய்யும்பொழுது, நிச்சயமாக அதற்காக வருத்தப்பட நேரிடும். தண்டனை ஒரு கருப்பைச் சிறையில் பெறப்படுகின்றது. நீங்கள் செய்துள்ள அனைத்து விடயங்களுக்கான காட்சிகளும்; கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதற்கான காட்சிகளை முதலில் உங்களுக்குக் கொடுக்காமல் தண்டனை கொடுக்கப்பட மாட்டாது. கருப்பைச் சிறையில் மருந்து போன்றன இருக்காது. அங்கு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்யும்பொழுது, கூறுகின்றார்கள்: கடவுளே, இந்தச் சிறையிலிருந்து என்னை விடுதலை செய்யுங்கள்;! இப்பொழுது யார் முன்னிலையில் குழந்தைகளாகிய நீங்கள் அமர்ந்துள்ளீர்கள்? தந்தையே அதிமேன்மையானவர், ஆனால் அவர் மறைமுகமானவர். அனைவருடைய சரீரங்களையும் பார்க்க முடியும், இங்கோ சிவபாபாவுக்கெனச் சொந்தமாகக் கரங்களோ அல்லது பாதங்களோ இல்லை. யார் மலர்கள் போன்றவற்றை ஏற்றுக் கொள்வார்கள்? அவர் ஏற்றுக் கொள்ள விரும்பினால், அவர் இவரின் கரங்கள் மூலம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், அவர் எவரிடமிருந்தும் எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. எவரும் தன்னைத் தொடக்கூடாது என்று சங்கராச்சாரியார் கூறுவதைப் போல் தந்தையும் கூறுகின்றார்: நான் எவ்வாறு தூய்மையற்றவர்களிடமிருந்து எதையாவது பெற முடியும்? எனக்கு மலர்கள் போன்றன தேவையில்லை. பக்தி மார்க்கத்தில், சோமநாத் ஆலயங்கள் போன்றன கட்டப்பட்டு, மலர்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. எவ்வாறு எவராலும் ஆத்மாவைத் தொட முடியும்? அவர் கூறுகின்றார்: நான் எவ்வாறு தூய்மையற்றவர்களிடமிருந்து மலர்களை ஏற்றுக்கொள்ள முடியும்? எவரும் அவரைத் தொடக்கூட முடியாது. தூய்மையற்றவர்கள் அவரைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இன்று, அவர்கள் “பாபா” என்று கூறிக் கொண்டிருக்கலாம், நாளையே அவர்கள் நரகவாசிகள் ஆகுவார்கள். பாபா அத்தகையவர்களைப் பார்ப்பதுவுமில்லை. தந்தை கூறுகின்றார்: நானே அதிமேன்மையானவர். நாடகத்துக்கேற்ப, நான் சந்நியாசிகள் போன்றோரையும் ஈடேற்ற வேண்டியுள்ளது. என்னை முற்றிலுமே எவரும் அறிய மாட்டார்கள். மக்கள் சிவனை வழிபடுகின்றார்கள், ஆனால் அவரே கீதையின் கடவுள் என்பதையும், அவர் இந்த ஞானத்தை எங்களுக்குக் கொடுப்பதற்காக இங்கு வருகிறார் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். கீதையில் கிருஷ்ணரின் பெயர் இடப்பட்டுள்ளது. கிருஷ்ணர் ஞானத்தைக் கொடுத்திருந்தால், சிவன் என்ன செய்து கொண்டிருந்திருப்பார்? ஆகவே, அவர் ஒருபொழுதும் வருவதேயில்லை என்று மக்களிற் சிலர் எண்ணுகின்றார்கள். ஓ! ஆனால், நீங்கள் கிருஷ்ணரைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்க மாட்டீர்கள். நான் தூய்மையாக்குபவர் என்றழைக்கப்படுகிறேன். உங்களிற் சிலரால் மாத்திரமே அதிகளவு மரியாதையைக் கொண்டிருக்கவும் முடிகின்றது. அவர் மிக எளிமையாக இருந்து விளங்கப்படுத்துகின்றார்: சாதுக்கள் போன்றோர் அனைவருக்கும் நானே தந்தை. ஒவ்வோர் ஆத்மாவுக்கும், சங்கராச்சாரியார் போன்றோருக்கும் நானே தந்தை ஆவேன். நிச்சயமாக அவர்களின் சரீரங்களின் தந்தையர்கள் பௌதீகமானவர்கள், ஆனால் நான் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. அனைவரும் என்னை வழிபடுகின்றார்கள். நான் இப்பொழுது இங்கு உங்கள் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கின்றேன். எவ்வாறாயினும், நீங்கள் யார் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை உங்களில் அனைவரும் புரிந்துகொள்வதில்லை. பிறவிபிறவியாக ஆத்மாக்கள் சரீர உணர்வு உடையவர்களாக இருந்து வந்தார்கள். ஆகவே, அவர்களால் தந்தையை நினைவுசெய்ய இயலாதுள்ளது. அவர்கள் தொடர்ந்தும் சரீரங்களையே பார்க்கின்றார்கள். அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகியிருந்தால், அவர்களால் அந்தத் தந்தையை நினைவுசெய்திருக்கவும், அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்றியிருக்கவும் இயலும். தந்தை கூறுகின்றார்: அனைவரும் என்னை அறிந்துகொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் முழுமையாக ஆத்ம உணர்வுடையவர்கள் மாத்திரமே சித்தியடைவார்கள். ஏனையோரில் சிறிதளவு சரீர உணர்வு எஞ்சியிருக்கும். தந்தை மறைமுகமானவர். நீங்கள் அவருக்கு எதையும் கொடுக்க முடியாது. விளங்கப்படுத்துவதற்காக, புத்திரிகளால் சிவாலயங்களுக்குச் செல்ல முடியும். குமாரிகளாகிய நீங்களே சிவபாபாவின் அறிமுகத்தைக் கொடுப்பவர்கள். நிச்சயமாக, குமார்கள், குமாரிகள் இருபாலாருமே இருக்கின்றார்கள். குமார்களும் ஏனையோருக்கு அறிமுகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். குறிப்பாகத் தாய்மார்கள் ஈடேற்றப்படுகின்றார்கள், ஏனெனில் அவர்கள் ஆண்களை விடப் பெருமளவு சேவை செய்துள்ளார்கள். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் ஏனைய கல்விகளில் மிகவும் ஆர்வமாக இருப்பதைப் போன்றே, சேவை செய்வதில் மிகவும் ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். அது பௌதீகமானதும், இதுவோ ஆன்மீகமானதுமாகும். ஒரு பௌதீகக் கல்வியைக் கற்பதாலும், அப்பியாசம் போன்றவற்றைக் கற்பதாலும் நீங்கள் எதையும் பெறுவதில்லை. உதாரணமாக, ஒரு தம்பதிக்குக் குழந்தை உள்ளபொழுது, அவர்கள் அவருக்குப் பெயரிடுதலை (ஆறாம் நாளில்) அதிகளவு ஆடம்பரத்துடன், பகட்டு போன்றவற்றுடனும் கொண்டாடுவார்கள், ஆனால் அவர் எதைப் பெறுவார்? அவர் எதையும் அடைவதற்குப் போதுமானளவு நேரம் இருக்காது. இப்பொழுது இங்கிருந்து பிரிந்து செல்கின்றவர்களும் மறுபிறவி எடுக்க வேண்டும், ஆனால் அவரால் எதையும் புரிந்துகொள்ள இயலாதிருக்கும். எவராவது இங்கு கற்று சரீரத்தை நீக்கிய பின்னர் அவர் கற்றவற்றுக்கேற்ப, தனது அடுத்த குழந்தைப் பருவத்தில் சிவபாபாவை நினைவுசெய்வார். இது ஒரு மந்திரமாகும். நீங்கள் ஒரு சிறு குழந்தைக்குக் கற்பிக்க முயற்சித்தால், ஒரு சின்னஞ்சிறிய புள்ளி போன்றவரைப் பற்றி எதையும் அவர் புரிந்துகொள்ளப் போவதில்லை. அவர்; “சிவபாபா, சிவபாபா” என்று மட்டுமே கூறுவார், சிவபாபாவை நினைவுசெய்யுங்கள், நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் அவருக்கு இவ்விதமாக விளங்கப்படுத்தினால், அவரால் சுவர்க்கம் செல்ல முடியும், ஆனால் அவரால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர இயலாதிருக்கும். வருகின்ற குழந்தைளில் பலர் “சிவபாபா, சிவபாபா” எனத் தொடர்ந்தும் கூறுகின்றார்கள். பின்னர், அவர்களுடைய இறுதி எண்ணங்கள் அவர்களை அவர்களுடைய இலக்குக்கு இட்டுச் செல்லும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. மக்கள் சிவனை வழிபடுகின்றார்கள், ஆனால் அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள். சிறு குழந்தைகளைப் போல், தொடர்ந்தும் “சிவ, சிவா” என்று கூறி, எதையும் புரிந்துகொள்ளாததைப் போன்றே, இங்கும், மக்கள் அவரை வழிபடுகின்றபோதிலும், அந்தளவிற்கு புரிந்துணர்வு இருப்பதில்லை. ஆகவே, நீங்கள் அவர்களுக்குக் கூறவேண்டும்: நீங்கள் வழிபடுகின்றவரே, ஞானக்கடலும், அவரே கீதையின் கடவுளும் ஆவார். அவர் எங்களுக்குக் கற்பிக்கின்றார். சிவபாபா தங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்று உலகில் வேறு எம்மனிதர்களும் கூற மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள், ஆனால் எவ்வாறாயினும், நீங்கள் அதை மறக்கின்றீர்கள். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்;கின்றேன். யார் கூறியது: “கடவுள் பேசுகின்றார்: காமமே கொடிய எதிரி, அது வெல்லப்பட வேண்டும்?” பழைய உலகைத் துறந்து விடுங்கள். ஹத்தயோகிகள் எல்லைக்குட்பட்ட துறவிகள். அவர் சங்கராச்சாரியாரும், இவர் சிவாச்சாரியாரும் (ஆசிரியராகிய சிவன்) ஆவார்கள். அவர் எங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் கிருஷ்ணாச்சாரியார் (கிருஷ்ணரே ஆசிரியர்) என்று கூறமுடியாது. அவர் ஒரு சிறு குழந்தை. சத்தியயுகத்தில் இந்த ஞானத்துக்கான அவசியமில்லை. சிவாலயங்கள் உள்ள இடங்களிலெல்லாம் குழந்தைகளாகிய உங்களால் மிகச்சிறந்த சேவையைச் செய்ய முடியும். சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். தாய்மார்கள் அங்கு சென்றால் அது சிறந்தது, ஆனால் குமாரிகள் அங்கு சென்றால், அது மேலும் சிறந்ததாகும். அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் இப்பொழுது பாபாவிடமிருந்து எங்கள் இராச்சியப் பாக்கியத்தைக் கோர வேண்டும். தந்தை எங்களுக்குக் கற்பிக்கின்றார், பின்னர் நாங்கள் சக்கரவர்த்திகளும் சக்கரவர்த்தினிகளும் ஆகுவோம். தந்தையே அதிமேன்மையானவர். எம் மனிதராலும்; எங்களுக்கு அத்தகைய கற்பித்தல்களைக் கொடுக்க முடியாது. இது கலியுகம் ஆகும். சத்தியயுகத்தில் அது அவர்களுடைய இராச்சியமாக இருந்தது. அவர்கள் எவ்வாறு அரசரும் அரசியும் ஆகினார்கள்? அவர்கள் சத்தியயுகத்து அதிபதிகள் ஆகும்வகையில் அவர்களுக்கு இராஜயோகம் கற்பித்தது யார்? நீங்கள் வழிபடுகின்றவரே எங்களுக்குக் கற்பித்து, எங்களைச் சத்தியயுகத்து அதிபதிகள் ஆக்குகின்றார். பிரம்மாவினூடாக ஸ்தாபனையும் விஷ்ணுவினூடாகப் பராமரிப்பும் இடம்பெறுகின்றது… தூய்மையற்ற இல்லறப் பாதைக்குரியவர்கள், பின்னர் தூய இல்லறப் பாதைக்குரியவர்கள் ஆகுகின்றார்கள். பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, தூய்மையற்றவர்களாகிய எங்களைத் தூய்மையாக்குங்கள்! எங்களைத் தூய்மையாக்கித் தேவர்கள் ஆக்குங்கள்! அங்கும், அது இல்லறப்பாதையே ஆகும். அவர்களுக்குத் துறவறப் பாதைக்குரிய குருமார்கள் ஆகுகின்ற விருப்பம் கிடையாது. நீங்கள் தூய்மையாகியவர்களின் குருமார்களாக ஆகமுடியும். விகாரத்துக்காகத் திருமணம் செய்யாத அத்தகைய பல சகபாடிகள் உள்ளார்கள். ஆகவே, குழந்தைகளாகிய உங்களால் இந்த அனைத்து வகையான சேவைகளையும் செய்ய முடியும். உங்களின் உள்ளே இந்த ஆர்வம் மிகுந்திருக்க வேண்டும். நாங்கள் ஏன் பாபாவின் தகுதிவாய்ந்த குழந்தைகளாகிச் சென்று அத்தகைய சேவையைச் செய்யக்கூடாது? பழைய உலகின் விநாசம் உங்களின் முன்னிலையில் இருக்கின்றது. சிவபாபா கூறுகின்றார்: கிருஷ்ணர் இங்கு இருக்க முடியாது. அவர் ஒருமுறை மாத்திரமே, சத்தியயுகத்தில் வருகின்றார். அவர் இன்னுமொரு பிறவியில் அதே முகச்சாயலையும், அதே பெயரையும் கொண்டிருக்க முடியாது. 84 பிறவிகளில், அவர் 84 முகச்சாயல்களைக் கொண்டிருப்பார். கிருஷ்ணர் எவருக்கும் இந்த ஞானத்தைக் கற்பிக்க முடியாது. அந்தக் கிருஷ்ணர் எவ்வாறு இங்கு வர முடியும்? நீங்கள் இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். அரைக்கல்பமாக, நீங்கள் மிகச்சிறந்த பிறவிகளைக் எடுத்தீர்கள், பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பமாகுகின்றது. மனிதர்கள் முழுமையாகவே மிருகங்களைப் போன்று ஆகுகின்றார்கள். அவர்கள் ஒருவர் மற்றவருடன் தொடர்ந்தும் சண்டை சச்சரவு செய்கின்றார்கள். அது இராவணனின் பிறவி, இல்லையா? எவ்வாறாயினும், ஓர் ஆத்மா 8.4 மில்லியன் பிறவிகளை எடுக்கின்றார் என்பதல்ல. பல்வேறுபட்ட வகையான உயிரினங்கள் உள்ளன, அது ஆத்மாக்கள் அத்தனை பிறவிகளை எடுக்கின்றார்கள் என்று அர்த்தமாகாது. தந்தை இங்கமர்ந்திருந்து இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். அவரே அதிமேன்மையான, கடவுள். அவர் எங்களுக்குக் கற்பிக்;கின்றார், அவருக்கு அடுத்ததாக இவர் உள்ளார். நீங்கள் நன்றாகக் கற்காது விட்டால், நீங்கள் ஒருவரின் பணிப்பெண் அல்லது வேலையாள் ஆகுகின்றீர்கள். நீங்கள் சிவபாபாவுக்கு ஒரு பணிப்பெண்ணாக அல்லது வேலையாளாக ஆக மாட்டீர்களா? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: கற்காததால், நீங்கள் சென்று சத்தியயுகத்தில் பணிப்பெண்களாக அல்லது வேலையாட்களாக ஆகுவீர்கள். ஒருவர் முற்றிலும் எச்சேவையும் செய்யாமல், வெறுமனே உண்டு அருந்தி, உறங்கினால், அவர் என்னவாக ஆகுவார்? நீங்கள் என்னவாக ஆகுவீர்கள் என்பது உங்கள் புத்திகளில் பிரவேசிக்கின்றது, இருப்பினும். நீங்கள் “நான் ஒரு சக்கரவர்த்தி ஆகுவேன்!” என்பதாக உணர்கின்றீர்கள். அவர்கள் பாபாவின் முன்னிலையிலும் வரவும் மாட்டார்கள். அவர்கள் தாங்கள் என்னவாக ஆகுவார்கள் என்பதைத் தாங்களே புரிந்துகொள்கின்றார்கள், இருப்பினும், அவர்கள்; எந்த வெட்கமும் அடைவதில்லை. தாங்கள் முன்னேற்றம் அடைந்து எதையாவது தாங்களுக்காக அடைய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இதனாலேயே பாபா கூறுகின்றார்: இந்த பிரம்மாவே உங்களுக்கு இவ்விடயங்களைக் கூறுகின்றார் என்று எண்ண வேண்டாம். உங்களுக்குக் கூறுபவர் சிவபாபாவே என்று எப்பொழுதும் கருதுங்கள். நீங்கள் சிவபாபாவுக்காக, மரியாதை கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், தர்மராஜிடமிருந்து அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். அவருடன் தர்மராஜும் இருக்கின்றார். குமாரிகள் மிகவும் திறமைசாலிகளாக ஆக வேண்டும். இங்கு நீங்கள் சிலவற்றைக் கேட்கின்றீர்கள், ஆனால் நீங்கள் வெளியே சென்றவுடன் அவை அனைத்தும் முடிவடைவதாக இருக்கக்கூடாது. பக்திமார்க்கத்தில் அதிகளவு விரிவாக்கம் உள்ளது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நஞ்சைத் துறந்து விடுங்கள். சுவர்க்கவாசிகள் ஆகுங்கள். அத்தகைய சுலோகங்களை உருவாக்குங்கள். தைரியமான பெண்சிங்கங்கள் ஆகுங்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையைக் கண்டடைந்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் ஏன் வேறு எதையும் பற்றி அக்கறைப்பட வேண்டும்? அரசாங்கம் சமயங்களை நம்புவதில்லை. ஆகவே, அவர்கள் எவ்வாறு மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கு இங்கு வருவார்கள்? நாங்கள் எக்குறித்த சமயத்தையும் நம்புவதில்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள். நாங்கள் அனைவரையும் ஒன்றாகவே கருதுகின்றோம். அவ்வாறாயின், நீங்கள் ஏன் சண்டை சச்சரவில் ஈடுபடுகின்றீர்கள்? பொய்மையைத் தவிர வேறு எதுவுமேயில்லை. எங்குமே பொய்மையே உள்ளது. எங்கும் உண்மையின் ஒரு சுவடு கூட இருப்பதில்லை. கடவுள் சர்வவியாபி என்று கூறும் பொய்யுடனேயே, முதற்பொய் ஆரம்பிக்கின்றது. இந்துசமயம் என்னும் அத்தகைய சமயம் கிடையாது. கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் சொந்தச் சமயம் உள்ளது. அவர்கள் தங்களை (தங்கள் சமயத்தை) மாற்றுவதில்லை. இந்தப் பாரத மக்கள் மாத்திரமே தங்கள் சமயத்தை மாற்றுபவர்களும், தங்களை இந்துக்கள் என்று கூறுபவர்களும் ஆவர். அவர்கள் தங்களுக்குக் கொடுக்கின்ற பெயர்களைப் பாருங்கள். ஸ்ரீ ஸ்ரீ இன்ன-இன்னார்… எவ்வாறாயினும், எவரும் ஸ்ரீ கிடையாது, அதாவது, இந்நேரத்தில் மேன்மையானவர்கள் கிடையாது. எவரும் ஸ்ரீமத்தை கூடக் கொடுக்க முடியாது. அவர்களுடைய கலியுக வழிகாட்டல்கள் மாத்திரம் உள்ளன. அதை ஸ்ரீமத் என்று நீங்கள் எவ்வாறு கூற முடியும்? குமாரிகளாகிய நீங்கள் உஷாரானவர்களாகவும், உற்சாகமிக்கவர்களும் ஆகினால், எவருக்கும் விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், மிகவும் சிறந்த, திறமைசாலிகளான யோகியுக்த் புத்திரிகளே தேவைப்படுகிறார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. முன்னேறிச் செல்வதற்கு, தந்தையின் சேவையில் ஈடுபட்டிருங்கள். வெறுமனே உண்டு, அருந்தி, உறங்குவது என்றால், உங்கள் அந்தஸ்தை இழப்பது என்று அர்த்தமாகும்.2. தந்தைக்கும் அவருடைய கற்பித்தல்களுக்குமான மரியாதையைக் கொண்டிருங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு, முழு முயற்சி செய்யுங்கள். தந்தையின் கற்பித்தல்களைக் கிரகித்து, ஒரு தகுதிவாய்ந்த, கீழ்ப்படிவான குழந்தை ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களை உலகச் சேவைக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இலகுவாக சம்பூர்ணம் அடைந்து மாயையை உங்கள் பணியாள் ஆக்குவீர்களாக.இப்பொழுது, உங்கள் நேரம், பேறுகள், ஞானம், தெய்வீகக் குணங்கள் மற்றும் சக்திகளை உலகச் சேவைக்காக அர்ப்பணியுங்கள். நீங்கள் எந்த எண்ணத்தைக் கொண்டிருந்தாலும், அது உலக சேவைக்கானதா என சோதியுங்கள். அனைத்தையும் சேவைக்காக ஒப்படைக்கும் போது, நீங்கள் இலகுவாக சம்பூர்ணம் அடைவீர்கள். சேவையின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பானது, வருகின்ற சிறு பரீட்சைத்தாள்கள் அல்லது சோதனைகள் இயல்பாகவே உங்களிடம் தம்மை அர்ப்பணிக்கின்றன. அப்பொழுது நீங்கள் மாயையை கண்டு பயப்பட மாட்டீர்கள், ஆனால் எப்பொழுதும் வெற்றியாளராகவே இருந்து, தொடர்ந்தும் சந்தோஷத்தில் நடனமாடுவீர்கள். மாயையை உங்கள் அடிமையாக அனுபவம் செய்வீர்கள். உங்களைச் சேவைக்காக நீங்கள் அர்ப்பணிக்கும்போது, மாயை இயல்பாகவே உங்களிடம் தன்னை அர்ப்பணிப்பாள்.
சுலோகம்:
சுய பரிசோதனையில் உங்கள் மனதை நீங்கள் மூடி வைத்துக்கொள்ளும்போது, கோபம் முடிவடையும்.