27.02.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்களை இராவண இராச்சியத்திலிருந்து விடுவித்து, உங்களுக்கு சற்கதி அருளவே வந்துள்ளார். அவர் உங்களை நரகவாசிகளிலிருந்து சுவர்க்கவாசிகள் ஆக்குவதற்காகவே வந்துள்ளார்.கேள்வி:
பாரத மக்களாகிய உங்களுக்குத் தந்தை எதைப்பற்றி ஞாபகப்படுத்தியுள்ளார்?பதில்:
ஓ குழந்தைகளே, பாரத மக்களே, நீங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அங்கு வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகள் இருந்தன. நீங்களே முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தீர்கள். பூமி, ஆகாயம் அனைத்தும் உங்களுக்கே சொந்தமாக இருந்தது. பாரதமே சிவபாபாவினால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயமாக இருந்தது. அங்கு தூய்மை இருந்தது. அத்தகைய பாரதம் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை உருவாக்கப்படவுள்ளது.
பாடல்:
அன்பான கடவுளே, குருடருக்கு வழிகாட்டுங்கள்!
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளான ஆத்மாக்கள் பாடலைக் கேட்டார்கள். இதைக் கூறியவர் யார்? ஆத்மாக்களின் ஆன்மீகத் தந்தை. ஆன்மீகக் குழந்தைகள் ஆன்மீகத் தந்தைக்குக் கூறினர்: ஓ பாபா! அவர் ஈஸ்வரர் என்றும், தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார். எத் தந்தை? பரம தந்தை, ஏனெனில் இரு தந்தையர் உள்ளனர்: லௌகீகத் தந்தை, இவ்வுலகிற்கு அப்பாலுள்ளவர். ஒரு லௌகீகத் தந்தையின் குழந்தைகள் இவ்வுலகிற்கு அப்பால் உள்ள தந்தையைக் கூவியழைக்கின்றனர்: ஓ பாபா! அச்சா, பாபாவின் பெயர் என்ன? சிவன். அவர் அசரீரியானவர், பூஜிக்கப்படுகின்றார். அவர் பரம தந்தை என அழைக்கப்படுகின்றார். ஒரு லௌகீகத் தந்தையை பரமன் என அழைக்க முடியாது. சகல ஆத்மாக்களினதும் அதிமேலான தந்தை ஒருவரே. சகல மனித ஆத்மாக்களும் அந்த ஒரு தந்தையையே நினைவு செய்கின்றனர். ஆத்மாக்கள் தங்களின் தந்தை யாரென்பதை மறந்துவிட்டனர். அவர்கள் கூவியழைக்கின்றனர்: ஓ, தந்தையாகிய கடவுளே! நாங்கள் எங்களின் தந்தையை இனங்காண்பதற்கு, குருடர்களாகிய எங்களுக்குப் பார்வையைக் கொடுங்கள். பக்தி மார்க்கத்தில் தடுமாறித் திரிவதிலிருந்து எங்களை விடுவியுங்கள். அவர்கள் சற்கதி அடைந்து தந்தையைச் சந்திப்பதற்கு மூன்றாவது கண் வேண்டுமெனத் தந்தையைக் கூவியழைக்கின்றனர். ஏனெனில், தந்தையே ஒவ்வொரு கல்பத்திலும் பாரதத்திற்கு வந்து, அதனைச் சுவர்க்கமாக்குகின்றார் என்பதாலாகும். இப்பொழுது இது கலியுகமாகும். இதன் பின்னர் சத்திய யுகம் வரவேண்டும். இது அதி மேன்மையான சங்கம யுகமாகும். எல்லையற்ற தந்தை வந்து, தூய்மையற்று சீரழிந்திருப்பவர்களை அதி மேன்மையானவர்களாக ஆக்குகின்றார். அவர்களே (இலக்ஷ்மி, நாராயணன்) பாரதத்தில் அதி மேன்மையானவர்களாக இருந்தனர். அது இலக்ஷ்மி, நாராயணன் வம்சத்தின் இராச்சியமாக இருந்தது. 5000 வருடங்களுக்கு முன்னர் சத்திய யுகத்தில் ஸ்ரீ இலக்ஷ்மி, ஸ்ரீ நாராயணனின் இராச்சியம் இருந்தது. பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு இவையனைத்தையும் ஞாபகப்படுத்துகின்றார். 5000 வருடங்களுக்கு முன்னர் பாரத மக்களாகிய நீங்கள் சுவர்க்க வாசிகளாக இருந்தீர்கள். இப்பொழுது அனைவரும் நரகவாசிகளாக உள்ளனர். 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது. பாரதத்திற்குப் பெரும் புகழ் உள்ளது, அங்கு வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க மாளிகைகள் இருந்தன. இப்பொழுது எதுவுமே இல்லை! அந்நேரத்தில் வேறு எந்த சமயங்களும் இருக்கவில்லை, சூரிய வம்சம் மாத்திரமே இருந்தது. சந்திர வம்சம்கூட பின்னரே வந்தது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சூரிய வம்சத்திற்குரியவர்களாக இருந்தீர்கள். இன்றும்கூட, அவர்கள் தொடர்ந்தும் இலக்ஷ்மி நாராயணனுக்கு ஆலயங்கள் கட்டுகின்றனர். எவ்வாறாயினும், எப்பொழுது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது என்பதையோ, அவர்கள் எவ்வாறு அதைப் பெற்றனர் என்பதையோ எவரும் அறியமாட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் அவர்களை வழிபடுகின்றனர், எனினும் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. எனவே, அது குருட்டு நம்பிக்கையாகும். அவர்கள் சிவனையும், இலக்ஷ்மி நாராயணனையும் வழிபடுகின்றனர். எனினும், அவர்களில் எவரினதும் சுயசரிதை அவர்களுக்குத் தெரியாது. பாரத மக்களே இப்பொழுது கூறுகின்றனர்: நாங்கள் தூய்மையற்றவர்கள்! பாபா, தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து, எங்களைத் துன்பத்திலிருந்தும், இராவண இராச்சியத்திலிருந்தும் விடுவியுங்கள்! தந்தையே வந்து அனைவரையும் விடுதலையாக்குகின்றார். சத்திய யுகத்தில் உண்மையில் ஒரு இராச்சியம் மாத்திரமே இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபுஜி கூட (காந்தி) தனக்கு இராம இராச்சியமே வேண்டும் எனக் கூறுவதுண்டு. தூய்மையற்றதாகிவிட்ட இல்லற தர்மம் தூய்மையாக வேண்டும். நாங்கள் சுவர்க்க வாசிகளாக விரும்புகின்றோம். நரக வாசிகளின் நிலை இப்பொழுது என்னவாகிவிட்டது என நீங்கள் பார்க்கலாம். இது அசுர உலகமான நரகம் என அழைக்கப்படுகின்றது. இந்த பாரதம் தேவ உலகமாக இருந்தது. நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். அது 8.4 மில்லியன் பிறவிகள் அல்ல. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஆதியில், நீங்கள் சாந்திதாம வாசிகளாக இருந்தீர்கள். நீங்கள் உங்களின் பாகங்களை நடிக்கவே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நடித்துள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாக மறு பிறவி எடுத்தாக வேண்டும். 84 மறுபிறவிகள் உள்ளன. எல்லையற்ற தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்க வந்துள்ளார். தந்தை குழந்தைகளாகிய உங்களுடன், அதாவது ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகின்றார். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில், மனிதர்களே மனிதர்களுக்கு பக்தி மார்க்க விடயங்கள் பற்றிக் கூறுவார்கள். அரைக் கல்பமாக பாரதம் சுவர்க்கமாக இருந்தபோது, தூய்மையற்ற எந்தவொரு மனிதரேனும் இருக்கவில்லை. இந்நேரத்தில், தூய்மையான மனிதர் ஒருவரேனும் இல்லை. இது தூய்மையற்ற உலகமாகும். கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார் என அவர்கள் கீதையில் எழுதியுள்ளனர். எனினும், கீதையைப் பேசியவர் அவரல்ல. மக்கள் தங்களது சொந்த சமய நூல்களைப் பற்றியேனும் அறியாதுள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தச் சமயத்தைக்கூட மறந்துவிட்டனர். இந்து சமயம் என ஒன்று இல்லை. நான்கு பிரதான சமயங்கள் உள்ளன. முதலாவது, ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் ஆகும். சூரிய, சந்திர வம்சங்கள் இரண்டும் சேர்ந்து தேவ தர்மம் எனப்படுகின்றது. அங்கு துன்பம் பற்றிய கேள்வியே இல்லை. நீங்கள் 21 பிறவிகளாக சந்தோஷ தாமத்தில் இருந்தீர்கள். பின்னர், பக்தி மார்க்கம் அதாவது இராவண இராச்சியம் ஆரம்பமானது. பக்தி மார்க்கம் கீழிறங்குவதற்கானதாகும். பக்தி இரவும், ஞானம் பகலும் ஆகும். இப்பொழுது காரிருள் சூழ்ந்த இரவாகும். சிவ ஜெயந்தி(சிவனின் பிறந்த தினம்), சிவராத்திரி (சிவனின் இரவு) என இரு பதங்கள் உள்ளன. சிவபாபா எப்பொழுது வருகின்றார்? இரவு வேளையில் ஆகும். பாரத மக்கள் காரிருளில் உள்ளபோதே தந்தை வருகின்றார். எவரது வாழ்க்கை வரலாறும் தெரியாமல், அவர்கள் தொடர்ந்தும் பொம்மைகளை வழிபடுகின்றனர். பக்தி மார்க்க சமய நூல்கள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இந்நாடகமும், உலகச் சக்கரமும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த ஞானம் எச்சமய நூல்களிலும் இல்லை. அது பக்தி ஞானம், அதாவது தத்துவம் ஆகும். அந்த ஞானம் சற்கதிக்கான பாதைக்குரியதல்ல. தந்தை கூறுகின்றார்: நான் வந்து, பிரம்மா மூலம் உங்களுக்கு உண்மையான ஞானத்தைக் கொடுக்கின்றேன். மக்கள் கூவியழைக்கின்றனர்: சந்தோஷ தாமத்திற்கும், சாந்தி தாமத்திற்குமான பாதையை எங்களுக்குக் காண்பியுங்கள். தந்தை கூறுகின்றார்: 5000 வருடங்களுக்கு முன்னர், முழு உலகமும் சுவர்க்கமாக இருந்தது, அதை நீங்கள் ஆட்சி செய்தீர்கள். சூரிய வம்ச இராச்சியம் இருந்தபோது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் சாந்தி தாமத்தில் இருந்தனர். அங்கு 900,000 பேர் நினைவுகூரப்படுகின்றனர். 5000 வருடங்களுக்கு முன்னர் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் செல்வந்தர்கள் ஆக்கப்பட்டீர்கள். உங்களுக்கு ஏராளமான செல்வம் வழங்கப்பட்டது! எனவே, அவையனைத்தையும் என்ன செய்தீர்கள்? நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள்! பாரதமே அனைத்திலும் அதி மேன்மையான பூமியாக இருந்தது. உண்மையில், அதுவே அனைவரதும் யாத்திரை ஸ்தலமாகும். ஏனெனில், அதுவே தூய்மையாக்குபவரான தந்தையின் பிறப்பிடமாகும். தந்தை வந்து, அனைத்துச் சமயத்தவருக்கும் சற்கதி அருள்கின்றார். இப்பொழுது இலங்கையில் மாத்திரமன்றி, முழு உலகிலும் இராவண இராச்சியமே நிலவுகின்றது. அனைவரிலும் ஐந்து விகாரங்களும் உள்ளன. சூரிய வம்ச இராச்சியத்தில் எவ்வித விகாரங்களும் இருக்கவில்லை. அப்பொழுது பாரதம் விகாரமற்றதாக இருந்தது. இப்பொழுது அது விகாரம் நிறைந்ததாக உள்ளது. சத்திய யுகத்தில் தேவ சமுதாயம் இருந்தது. அவர்கள் 84 பிறவிகளை எடுத்து, இப்பொழுது அசுர சமுதாயத்தினர் ஆகிவிட்டனர். அவர்கள் மீண்டும் தேவ சமுதாயத்தினர் ஆகவேண்டும். பாரதம் மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்தது. அது இப்பொழுது ஏழையாகிவிட்டது. இதனாலேயே அது உதவிக்காகக் கையேந்தி நிற்கின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தீர்கள். நீங்கள் பெறுகின்ற சந்தோஷத்தை வேறு எவருமே பெறமுடியாது. நீங்களே முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தீர்கள். பூமி, ஆகாயம் அனைத்தும் உங்களுக்கே சொந்தமாக இருந்தது. பாரதம் சிவபாபாவினால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயமாக இருந்தது எனத் தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். அங்கு தூய்மை இருந்தது. தேவர்களே அப்புதிய உலகை ஆட்சிபுரிந்தனர். பாரத மக்கள் இராதைக்கும், கிருஷ்ணருக்குமிடையிலான உறவுமுறையையேனும் அறியாதுள்ளனர். அவர்கள் வெவ்வேறு இராச்சியத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பின்னர், அவர்களின் திருமணத்தின்போது, இலக்ஷ்மி நாராயணன் ஆகினர். எந்தவொரு மனிதரிடமும் இந்த ஞானம் இல்லை. பரம தந்தை, பரமாத்மா மாத்திரமே ஞானக்கடல் ஆவார். அவரே இந்த ஆன்மீக ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தையால் மாத்திரமே உங்களுக்கு இந்த ஆன்மீக ஞானத்தைக் கொடுக்க முடியும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! உங்களின் பரம தந்தை, பரமாத்மா, சிவனாகிய என்னை நினைவு செய்யுங்கள்! நினைவின் மூலமாக மாத்திரமே நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாகுவதற்கு, அதாவது தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாகுவதற்கே இங்கு வருகின்றீர்கள். இப்பொழுது இது இராவண இராச்சியமாகும். இராவண இராச்சியம் பக்தி மார்க்கத்திலேயே ஆரம்பமாகின்றது. இராவணன் ஒரு சீதையை மாத்திரம் கடத்திச் செல்லவில்லை. பக்தி செய்யும் அனைவரும் இராவணனின் பிடிக்குள்ளேயே உள்ளனர். முழு உலகமும் ஐந்து விகாரங்கள் என்ற இராவணனின் சிறைக்குள் உள்ளது. இப்பொழுது அனைவரும் துன்பக் குடிலில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தந்தை வந்து அனைவரையும் விடுதலை செய்கின்றார். தந்தை இப்பொழுது மீண்டும் ஒரு தடவை சுவர்க்கத்தை உருவாக்குகின்றார். பெருமளவு செல்வத்தைக் கொண்டவர்கள் சுவர்க்கத்தில் உள்ளனர் என்றில்லை. இல்லை, இப்பொழுது இது நரகமாகும்! அனைவரும் தூய்மையற்றிருக்கின்றனர். இதனாலேயே அவர்கள் கங்கைகளுக்கு நீராடச் செல்கின்றனர். கங்கைகளே தூய்மையாக்குபவை என அவர்கள் நம்புகின்றனர். எவ்வாறாயினும், எவருமே தூய்மையாகுவதில்லை. தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்பட முடியும், நதிகளை அவ்வாறு அழைக்க முடியாது. அவையனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை ஆகும். தந்தை மாத்திரமே வந்து இவையனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். ஒருவர் பௌதீகத் தந்தை என்பதையும், மற்றையவர் சூட்சும தந்தையான பிரஜாபிதா என்பதையும், அத்துடன் இவ்வுலகிற்கு அப்பால் இன்னுமொரு தந்தை இருக்கின்றார் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். மூன்று தந்தையர் உள்ளனர். சிவபாபா பிரஜாபிதா பிரம்மா மூலம் பிராமண தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். பிராமணர்கள் தேவர்களாகுவதற்காக அவர்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கப்படுகின்றது. தந்தை ஒரு தடவை மாத்திரமே வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கின்றார். ஆத்மாக்கள் மறுபிறவி எடுக்கின்றனர். ஆத்மா கூறுகின்றார்: நான் எனது சரீரத்தை நீக்கி வேறொன்றை எடுக்கின்றேன். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்களின் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். சரீரதாரிகள் எவரையும் நினைவு செய்யாதீர்கள்! இப்பொழுது இது மரண பூமியின் இறுதிக் காலமாகும். அமரத்துவ பூமி ஸ்தாபிக்கப்படுகின்றது. ஏனைய எண்ணற்ற சமயங்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். சத்திய யுகத்தில், ஒரேயொரு தேவ தர்மம் மாத்திரமே உள்ளது. பின்னர், திரேதாயுகத்தில், இராமர் சீதையின் சந்திர வம்சம் உள்ளது. பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு உலகச் சக்கரம் முழுவதையும் பற்றி நினைவுபடுத்துகின்றார். தந்தை மாத்திரமே அமைதியும், சந்தோஷமும் நிறைந்த பூமியை ஸ்தாபிக்கின்றார். மனிதர்களால் மனிதர்களுக்கு சற்கதி அருள முடியாது. அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்து குருமார் ஆவர். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் பல விக்கிரகங்களைச் செய்து அவற்றை வழிபட்ட பின்னர், ‘மூழ்கடித்துவிடுங்கள்!, மூழ்கடித்துவிடுங்கள்!’ எனக் கூறுகின்றனர். அவர்கள் அதிகளவில் விக்கிரகங்களை வழிபட்டு, அவற்றிற்குப் பிரசாதம் படைக்கின்றார்கள். எவ்வாறாயினும், பிராமணப் புரோகிதர்களே அவற்றை உண்கின்றார்கள். அது பொம்மை வழிபாடு எனப்படுகின்றது. அதிகளவு குருட்டு நம்பிக்கை உள்ளது! இப்பொழுது, யாரால் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள். நீங்கள் தந்தையிடமிருந்து இராஜ யோகம் கற்கின்றீர்கள். இந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பிரஜைகள் பலர் உருவாக்கப்பட வேண்டும். பலரில் ஒரு கைப்பிடியளவினர் மாத்திரமே அரசர்களாகின்றனர். சத்திய யுகம் பூந்தோட்டம் என அழைக்கப்படுகின்றது. இப்பொழுது இது முட்காடாகும். இராவண இராச்சியம் இப்பொழுது மாறுகின்றது. விநாசம் இடம்பெற்றாக வேண்டும். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இலக்ஷ்மி நாராயணனிடம்கூட இந்த ஞானம் இல்லை. இந்த ஞானம் மறைந்துவிடுகின்றது. பக்தி மார்க்கத்தில் எவருக்கும் தந்தையைத் தெரியாது. தந்தை மாத்திரமே படைப்பவர் ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரும் படைப்புக்களேயாவர். கடவுள் சர்வவியாபகர் என அழைக்கப்படும்போது, அனைவரும் தந்தையாகி விடுகின்றனர். அந்த வகையில், ஓர் ஆஸ்திக்கான உரிமை எதுவும் கிடையாது. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் உங்களின் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். தந்தை மாத்திரமே சற்கதி அருள்பவர். 84 பிறவிகளை எடுப்பவர்களே சத்திய யுகத்திற்கு முதலாவதாகச் செல்வார்கள் என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் எத்தனை பிறவிகள் எடுப்பார்கள்? ஏறக்குறைய 40 பிறவிகள் ஆகும். இக்கணிப்பீட்டைச் செய்து பார்க்கலாம். கடவுள் ஒருவரைத் தேடி மக்கள் அதிகளவில் தடுமாறித் திரிகின்றனர். நீங்கள் இனியும் தடுமாறித் திரியவேண்டியதில்லை. நீங்கள் தந்தை ஒருவரை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். இது நினைவு யாத்திரை ஆகும். இது தூய்மையாக்குபவரான இறை தந்தையின் பல்கலைக்கழகம் ஆகும். ஆத்மாக்களாகிய நீங்கள் கற்கின்றீர்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என சாதுக்களும், புனிதர்களும் கூறுகின்றனர். ஆத்மாக்களே அவர்களின் செயல்களுக்கேற்ப மறுபிறவி எடுக்க வேண்டும். ஆத்மாக்களே நல்ல, தீய செயல்களைச் செய்கின்றனர். இந்நேரத்தில், உங்களின் செயல்கள் பாவகரமானவை ஆகிவிட்டன. சத்திய யுகத்தில், செயல்கள் நடுநிலையானவை. அங்கு பாவச் செயல்கள் எதுவும் இல்லை. அது புண்ணியாத்மாக்களின் உலகமாகும். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டு விளங்கப்படுத்தப்பட வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. முட்களை மலர்களாக்கி பூந்தோட்டமாகிய சத்தியயுகத்தை உருவாக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். தீய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.
2. தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற ஆன்மீக ஞானத்தை அனைவருக்கும் கூறுங்கள். ஆத்ம உணர்வுடையவராகுவதற்கு முயற்சி செய்யுங்கள். சரீரதாரிகள் எவரையுமன்றி, ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்.ஆசீர்வாதம்:
சதா உங்கள் இராஜ குடும்ப விழிப்புணர்வினால், தெய்வீகக் குணங்களின் சொரூபமாகவிருந்து அதிமேலான ஸ்;திதியில் நிலைத்திருப்பீர்களாக.இராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமது பாதங்களை நிலத்திலோ, அழுக்கிலோ வைக்க மாட்டார்கள். இங்கே, சரீர உணர்வு அழுக்கு என்பதால் அதற்குள் செல்லாதீர்கள். ஆனால் அந்த அழுக்கிலிருந்து மிகவும் தொலைவில் இருங்கள். நீங்கள் அதிமேலான தந்தையின் இராஜகுடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், உயர்வான ஸ்திதியை கொண்டவர்கள் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருந்தால், உங்கள் பார்வை கீழே செல்லாது. சதா தெய்வீகக் குணங்களின் சொரூபம் என உங்களையே நீங்கள் பார்த்து, அதிமேலான ஸ்திதியில் நிலைத்திருங்கள். நீங்கள் பலவீனங்களைப் பார்க்கும் போது, தொடர்ந்தும் அவற்றை முடித்துவிடுங்கள். அவற்றைப் பற்றி நீங்கள் மீண்டும் மீண்டும் நினைப்பீர்களானால் அவை நிலைத்திருக்கும்.
சுலோகம்:
இராஜரீகமான ஒருவர் தனது மலர்ச்சியான, சந்தோஷமான முகத்தினால் தூய்மையின் இராஜரீக அனுபவத்தைக் கொடுப்பார்.