19.01.20 Avyakt Bapdada Tamil Lanka Murli 02.09.85 Om Shanti Madhuban
ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெறுவதற்கான இலகுவான வழிமுறை, அன்பே ஆகும்.
இன்று, பாபா விசேடமான அதியன்பிற்குரிய குழந்தைகளுக்கு அன்பின் பிரதியுபகாரத்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளார். பாபா மதுவனவாசிகளுடன் அவர்களின் களைப்பற்ற சேவையின் விசேடமான பலனாக சந்திப்பைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். இது அன்பின் நடைமுறை உதாரணம் ஆகும். பிராமணக் குடும்பத்தின் விசேட அத்திவாரம், இந்த விசேடமான அன்பே ஆகும். தற்சமயம், சேவையின் ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெறுவதற்கான இலகுவான வழிமுறை, அன்பே ஆகும். யோகி வாழ்க்கையின் அத்திவாரம் நம்பிக்கையே. ஆனால், குடும்பத்திற்கான அத்திவாரம் அன்பே ஆகும். இந்த அன்பே உங்களை யாராவது ஒருவரின் இதயத்திற்கு நெருக்கம் ஆக்குகிறது. தற்சமயம், நினைவிற்கும் சேவைக்கும் இடையிலான சமநிலையுடன், அன்பிற்கும் சேவைக்கும் இடையிலான சமநிலையே சேவையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறை ஆகும். இந்தத் தேசத்தில் நடைபெறும் சேவையோ அல்லது வெளிநாடுகளில் நடைபெறும் சேவையோ, இரண்டிலும் வெற்றி பெறுவதற்கான வழிமுறை, ஆன்மீக அன்பே ஆகும். பலரிடமிருந்தும் ஞானம் மற்றும் யோகம் என்ற வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், திருஷ்டியினூடாகவும் மேன்மையான எண்ணங்களினூடாகவும் அன்பை ஆத்மாக்கள் அனுபவம் செய்தல், விசேடமானதும் புதுமையானதும் ஆகும். இன்றைய உலகிற்கு அன்பே தேவைப்படுகிறது. ஓர் ஆத்மா எத்தனை அகங்காரம் உடையவராக இருந்தாலும், அன்பால் அவரை நெருக்கமாகக் கொண்டு வரமுடியும். மக்கள் அன்பை யாசிக்கிறார்கள். அமைதியை யாசிக்கிறார்கள். ஆனால், அன்பு நிறைந்த திருஷ்டியால் மட்டுமே உங்களால் அமைதியின் அனுபவத்தைக் கொடுக்க முடியும். எனவே, அன்பு இயல்பாகவே அமைதியின் அனுபவத்தைக் கொடுக்கிறது. ஏனெனில், நீங்கள் அதனால் அன்பில் மூழ்கியவர்கள் ஆகுகிறீர்கள். இதனாலேயே, நீங்கள் குறுகிய காலத்திற்கு இயல்பாகவே சரீரமற்றவர் ஆகுகிறீர்கள். சரீரமற்றவர் ஆகுவதனால், நீங்கள் இலகுவாக அமைதியை அனுபவம் செய்கிறீர்கள். தந்தையும் உங்களின் அன்பிற்கு மட்டுமே பதில் அளிக்கிறார். இரதம் வேலை செய்தால் என்ன செய்யாவிட்டாலென்ன, தந்தை அன்பின் அத்தாட்சியைக் கொடுக்க வேண்டியுள்ளது. இதுவே குழந்தைகளான உங்களில் பாப்தாதா காண வேண்டிய அன்பின் உடனடியான புலப்படும் பலன் ஆகும். சிலர் வெளிநாடுகளில் சேவை செய்துவிட்டுத் திரும்பி வந்துள்ளார்கள். (குல்ஸார் தாதி, ஜகதீஷ் பாய், நிர்வேர் பாய்) மற்றவர்கள் இப்போது செல்கிறார்கள். (தாதிஜியும் மோகினி பென்னும்). அந்த ஆத்மாக்களும் அன்பின் பலனைப் பெறுகிறார்கள். நாடகத்தின்படி, நீங்கள் ஒன்றை நினைக்கிறீர்கள். வேறொன்று நிகழ்கிறது. எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாகப் பலனைப் பெறுகிறீர்கள். ஆகவே, இயல்பாகவே நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் உங்களின் பாகங்களை மிக நன்றாக நடித்துவிட்டுத் திரும்பி வந்துள்ளீர்கள். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ள நாடகம் நிச்சயிக்கப்பட்டிருப்பதனால், நீங்கள் இலகுவாகப் பலனைப் பெறுகிறீர்கள். வெளிநாடுகளும் ஆழ்ந்த அன்புடன் சேவையில் முன்னேறிச் செல்கின்றன. எங்கும் அவர்களிடம் மிக நல்ல தைரியமும் உற்சாகமும் காணப்படுகின்றன. அனைவரின் நன்றிக்கான எண்ணங்கள் தொடர்ந்து பாப்தாதாவை வந்தடைகின்றன. ஏனெனில், அவர்களும் பாரதத்தில் இத்தகைய தேவை இருப்பதைப் புரிந்து கொண்டுள்ளார்கள். பாரதத்திற்கான இந்த அன்பே, அவர்களுக்கு அந்த ஒத்துழைப்பைக் கொடுக்கிறது. பாரதத்தில் சேவை செய்யும் ஒத்துழைக்கும் குடும்பங்களுக்கு அவர்கள் தமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறார்கள். எந்தளவிற்குத் தேசம் தொலைவில் உள்ளதோ, அந்தளவிற்கு அவர்கள் இதயபூர்வமான பராமரிப்பைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்களாக நெருக்கமாக இருக்கிறார்கள். இதனாலேயே, பாப்தாதா குழந்தைகளுக்கு அவர்களின் நன்றிகளுக்குப் பிரதியுபகாரமாக அன்பையும் நினைவுகளையும் நன்றிகளையும் கொடுக்கிறார். தந்தையும் உங்களின் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுகிறார்.
பாரதத்திலும், அவர்கள் மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் அமைதிப் பேரணியில் கலந்து, மிக நல்ல பாகங்களை நடிக்கிறார்கள். எங்கும், செய்யப்படும் சேவையில் மிகுந்த ஆரவாரமும் அழகும் காணப்படுகின்றன. ஊக்கமும் உற்சாகமும் உங்களின் களைப்பை நீங்கள் மறக்கச் செய்து, நீங்கள் வெற்றி பெறச் செய்கிறது. எங்கும் சேவையில் பெறப்படும் வெற்றி மிகவும் நல்லது. பாப்தாதாவும் சேவைக்காகக் குழந்தைகள் கொண்டிருக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறார்.
ஜகதீஷ்பாய் பாப்பரசரைச் சந்தித்துவிட்டு, நைரோபியில் இருந்து திரும்பியிருந்தார்:
நீங்கள் பாப்பரசருக்கு திருஷ்டி கொடுத்தீர்கள், அல்லவா? இதுவும் விஐபி களுக்குச் சேவை செய்வதில் இலகுவாக வெற்றி பெறுவதற்கான வழிமுறை ஆகும். பாரதத்தில், குறிப்பாகப் பிரதம மந்திரி வந்தார். எனவே, பாரதத்திலும் விஐபி வந்தார்கள் என உங்களால் இப்போது கூற முடியும். வெளிநாடுகளில், குறிப்பாகப் பிரதானமான ஆதிக்கம் செலுத்தும் மதத்தலைவர்கள் உங்களுடன் நெருங்கிய தொடர்பில் வந்தால், எவருக்கும் தாம் உங்களுடன் தொடர்பில் வந்தோம் எனக் கூறும் தைரியம் இலகுவாக ஏற்படும். எனவே, இந்தத் தேசத்திற்காக மிக நல்லதொரு வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அது வெளிநாட்டுச் சேவைக்கும் விசேடமான வழிமுறை ஆகும். எனவே, காலத்திற்கேற்ப, சேவையில் நெருங்கி வருவதைத் தடுக்கும் எதுவும் இலகுவாக முடிவிற்கு வந்துவிடும். குறைந்தபட்சம் உங்களால் பிரதம மந்திரியைச் சந்திக்க முடிந்தது. எனவே, இந்த உதாரணம் உலகிலுள்ள மக்களுக்குச் சேவை செய்வதிலும் உதவியாக இருக்கும். மற்றவர்கள் வந்தார்களா என்ற அனைவரின் கேள்வியும் இப்போது முடிந்துவிட்டது. எனவே, இந்த வருடம், நாடகத்தின்படி, இது சேவையில் இலகுவான வெளிப்படுத்தும் வழிமுறை ஆகியுள்ளது. அவர்கள் இப்போது நெருங்கி வருகிறார்கள். அவர்களின் பெயர்களே பணியைச் செய்யும். எனவே, அவர்களின் பெயர்களே பணியைச் செய்வதற்கான களம் இப்போது தயாராகி உள்ளது. அவர்கள் ஒலியைப் பரப்ப மாட்டார்கள். ஒலியைப் பரப்புவதற்கான மைக்குகள் வேறுபட்டவர்கள். இவர்கள் அந்த மைக்குகளுக்கு ஒளியைக் கொடுப்பவர்கள். அவ்வாறிருந்தும், நிலம் நன்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் விஐபி களுக்குச் சேவை செய்வதைப் பற்றி நீங்கள் நினைத்தது - அது வெளிநாடுகளில் சிரமமானது - இப்போது எங்கும் அது இலகுவாக இருப்பதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்கள். இந்தப் பெறுபேறு இப்போது நல்லது. அவர்களின் பெயர்களால், பணியைச் செய்யவிருப்பவர்கள் ஆயத்தம் ஆகுவார்கள். இப்போது, யார் ஒரு கருவி ஆகுகிறார் எனப் பாருங்கள். நீங்கள் அனைவரும் நிலத்தைத் தயார்ப்படுத்தவே எங்கும் சென்றீர்கள். நீங்கள் பல்வேறு திசைகளில் காலடி பதித்து, அவற்றைத் ஆயத்தப்படுத்தினீர்கள். இப்போது, உடனடியான, நடைமுறைப் பலன் எங்கிருந்து வெளிப்படுகிறது என்பதைக் காண்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. உங்களின் பெறுபேறுகள் அனைத்தும் நல்லதே.
பாத யாத்திரை செல்பவர்களும் ஒரே வலிமையும் ஒரே ஆதாரமும் என்பதுடன் முன்னேறிச் செல்கிறார்கள். முதலில், அது சிரமமாகத் தென்பட்டது. ஆனால், நடைமுறையில் அது இலகுவாக உள்ளது. எனவே, இந்தத் தேசத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருக்கும் அனைவருக்கும், சேவைக்குக் கருவிகளாக வந்திருப்பவர்களுக்கும், பலரை பாப்தாதாவின் மீது அன்பானவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் ஆக்கியவர்களுக்கும் பாபா விசேடமான அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். ஒவ்வொரு குழந்தையின் ஆசீர்வாதமும் அவருக்கே உரியது. இந்த அமைதிப் பேரணியில் பாதயாத்திரையாகச் செல்லும் பாரதத்தின் குழந்தைகள் அனைவருக்கும், சேவைக்குக் கருவிகளாக இருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் அனைவருக்கும், மதுவனவாசிகளாக இருந்து மேன்மையான சேவைக்குக் கருவிகளாக இருப்பவர்களுக்கும், அமைதிப் பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்குக் கருவிகளாக இருக்கும் பாரதத்தின் குழந்தைகள் அனைவருக்கும், எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், சேவையின் வெற்றிக்காக பாபா விசேடமான அன்பையும் நினைவுகளையும் பாராட்டுக்களையும் வழங்குகிறார்.
அனைவரும் ஒவ்வோர் இடத்திலும் முயற்சி செய்துள்ளார்கள். எவ்வாறாயினும், இவர்கள் விசேடமான பணிக்குக் கருவிகளாக இருப்பவர்கள். இதனாலேயே, அவர்கள் குறிப்பாகத் தமது கணக்குகளில் சேமித்துள்ளார்கள். ஒவ்வொரு நாட்டிலும் - மொரிஸியஸ், நைரோபி, அமெரிக்கா - உதாரணங்கள் தயார் ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்த உதாரணங்கள் எதிர்காலத்தில் இடம்பெற உள்ள வெளிப்படுத்துகையில் ஒத்துழைப்பார்கள். அமெரிக்காவைச் சேர்ந்தவர்களும் குறைவாக எதையும் செய்துவிடவில்லை. வெளிநாட்டில், பெரும்பாலானவை இன்னமும் கிறிஸ்தவப் பிராந்தியங்களே ஆகும். அவர்கள் அந்த சக்தியை இழந்திருந்தாலும், தமது மதத்தை அவர்கள் இன்னமும் கைவிடவில்லை. அவர்கள் தேவாலயத்திற்குச் செல்வதை விட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் தமது மதத்தைக் கைவிடவில்லை. இதனாலேயே, பாப்பரசர் அங்கு ஓர் அரசரைப் போல் இருக்கிறார். நீங்கள் அரசரை அணுகினால், இயல்பாகவே பிரஜைகள் உங்களுக்கு அந்த மரியாதையைக் கொடுப்பார்கள். எனவே, உறுதியான நம்பிக்கை உடைய கிறிஸ்தவர்களுக்கும் இது நல்லதோர் உதாரணம் ஆகும். இந்த உதாரணம், கிறிஸ்தவர்களுக்குக் கருவி ஆகும். கிருஷ்ணருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. பாரதத்தின் சூழல் வேறுபட்டது. பாதுகாப்பிற்கான அக்கறை அதிகளவில் உள்ளது. எவ்வாறாயினும், அவர் உங்களை அன்புடன் சந்தித்தார். அது நல்லதே. இராஜரீகத்துடன் அந்த நேரத்தைக் கொடுத்தல், உத்தியோகபூர்வமாகச் சந்தித்தல் என்பவை அதற்கேயுரிய விளைவை ஏற்படுத்தும். இது, காலம் நெருங்கி வருவதையே காட்டுகிறது.
வெளிநாட்டில், இலண்டனிலும், எண்ணிக்கை மிகவும் நன்றாக உள்ளது. அவர்கள் குறிப்பாக முரளியிலும் படிப்பிலும் அன்பு வைத்துள்ளார்கள். அதுவே அத்திவாரம் ஆகும். இலண்டன் அதில் முதலாம் இலக்கத்தில் உள்ளது. என்ன நிகழ்ந்தாலும், அவர்கள் ஒருபோதும் வகுப்பைத் தவறவிடுவதில்லை. இலண்டன் அதிகாலை 4.00 மணித் தியானத்திற்கும் காலை வகுப்பிற்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதற்கான காரணம், அன்பே ஆகும். அன்பினால், அனைவரும் வருவதற்கு ஈர்க்கப்படுகிறார்கள். நீங்கள் சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்குவதில் மிக நல்ல கவனம் செலுத்துகிறீர்கள். தொலைவில் உள்ள நாடுகளில், நிலையம் அல்லது தமது சொந்த வீடுகளில் சூழலையே அவர்கள் ஆதாரமாகக் கருதுகிறார்கள். சிறியதொரு விடயம் நிகழ்ந்தாலும், நீங்கள் உடனடியாக உங்களைச் சோதித்து, அந்தச் சூழலைச் சக்திநிறைந்தது ஆக்குதவற்கு மிகுந்த முயற்சி செய்கிறீர்கள். அங்கு, அந்தச் சூழலைச் சக்திநிறைந்தது ஆக்குவதற்கான மிக நல்லதோர் இலக்கு உங்களுக்கு உள்ளது. அற்ப விடயங்களால் நீங்கள் சூழலைப் பாழாக்குவதில்லை. சூழல் சக்திவாய்ந்ததாக இல்லாவிட்டால், சேவையில் வெற்றி ஏற்படாது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் இதில் மிக நல்ல கவனம் செலுத்துகிறீர்கள். அதாவது, உங்களின் சொந்த முயற்சிகளிலும் நிலையத்தின் சூழலிலும் கவனம் செலுத்துகிறீர்கள். உங்களில் எவரும் தைரியத்தையும் உற்சாகத்தையும் பேணுவதில் சளைத்தவர்கள் இல்லை.
நீங்கள் எங்கு காலடி பதித்தாலும், நிச்சயமாக பிராமணர்களுக்கும் அந்த நாட்டிற்கும் விசேடமான நன்மை உள்ளது. அவர்கள் ஒரு செய்தியைப் பெறுகிறார்கள். பிராமணர்களும் மேலதிக சக்தியை அனுபவம் செய்வதுடன் பராமரிப்பையும் பெறுகிறார்கள். பௌதீக ரூபத்தில் விசேடமான பராமரிப்பைப் பெறுவதில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் இந்த சந்தோஷத்துடன் சேவையில் முன்னேறி, வெற்றி பெறுகிறீர்கள். தொலைவில் வசிப்பவர்களுக்குப் பராமரிப்பு அவசியம். அவர்கள் பராமரிப்பைப் பெற்றுப் பறக்கிறார்கள். இங்கே சுவர்க்கத்தின் ஆனந்தமும் சங்கமயுகமும் இரண்டும் அனுபவம் செய்யப்படுவதைப் போன்று, மதுவனத்திற்கு வர முடியாதவர்கள், அங்கே இருந்தவண்ணம் மதுவனத்தை அனுபவம் செய்கிறார்கள். இதனாலேயே, நாடகத்தின்படி, நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் பாகம் அவசியமானதே. அதில் வெற்றியும் உள்ளது. வெளிநாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும், சேவைக்காகத் தனிப்பட்ட முறையில் உங்களின் பெயரால் விசேடமான வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் சேவையில் வெற்றிக்கு விசேட பிரதியுபகாரமாக அன்பையும் நினைவுகளையும் எற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் முன்னால் இருக்கிறார். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பாபாவின் கண்களின் முன்னால் தோன்றுகிறார். பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பையும் நினைவுகளையும் கொடுக்கிறார். வருவதற்குப் பரிதவிக்கும் குழந்தைகளின் அற்புதங்களைப் பார்க்கையில், பாப்தாதா அந்தக் குழந்தைகளுக்கு சதா அன்பு மலர்களைப் பொழிகிறார். அவர்களின் புத்திகளின் சக்தி மிகக்கூர்மையானது. அவர்களிடம் வேறெந்த விமானங்களும் கிடையாது. (பயணம் செய்வதற்கான வழிமுறைகள்) எனவே அவர்களின் புத்திகளெனும் விமானம் கூர்மையானது. அவர்களின் புத்திகளின் சக்தியைக் கண்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வோர் இடத்திற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்பு உள்ளது. சிந்திகளும் இப்போது நெருங்கி வருகிறார்கள். ஆரம்பத்தில் நிகழ்ந்த எதுவும் இறுதியிலும் நிகழும்.
நாம் சமூக சேவை செய்வதில்லை என எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த பொய்த்தோற்றமும் இந்த அமைதிப் பேரணியைப் பார்ப்பதன் மூலம் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது, மிகுந்த விசையுடன் ஒரு புரட்சிக்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. அமைதிப் பேரணியில் இருப்பவர்களை டெல்லியைச் சேர்ந்தவர்களும் அழைக்கிறார்கள். பல பிராமணர்கள் அவர்களின் வீட்டிற்கு வருவார்கள். பாக்கியசாலிகளுக்கே இத்தனை பிராமண விருந்தாளிகள் கிடைப்பார்கள். ஒவ்வொருவருக்கும் டெல்லியின் மீது உரிமை உள்ளது. உரிமையுள்ளவர்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும். உங்களின் பெயர் டெல்லியில் இருந்து உலகம் முழுவதும் பரவும். ஆமாம், நீங்கள் உங்களின் சொந்த இடங்களில் அனைத்தையும் செய்கிறீர்கள். ஆனால், இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும், டெல்லியின் தொலைக்காட்சியும் வானொலியும் கருவிகள் ஆகும்.
தாதி நிர்மல்சாந்தாவிடம் பேசுகிறார்:
இதுவே ஆதி இரத்தினங்களின் அடையாளம் ஆகும். எப்போதும் ‘ஹா ஜி’ என்ற பாடத்தை நினைவு செய்தவண்ணம் நீங்கள் சரீரத்திற்கு சக்தியைக் கொடுத்து இங்கு வந்துள்ளீர்கள். ஆதி இரத்தினங்களுக்கு இந்த இயல்பான சம்ஸ்காரம் உள்ளது. நீங்கள் ஒருபோதும் இல்லை எனச் சொல்வதில்லை. நீங்கள் எப்போதும் ‘ஹா ஜி’ என்றே சொல்கிறீர்கள். இந்த ‘ஹா ஜி’ என்பது உங்களை மகத்தான பிரபு ஆக்கியுள்ளது. இதனாலேயே, பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். தைரியத்தைப் பேணிய குழந்தைக்குத் தந்தை உதவி செய்ததுடன், இந்த அன்பான சந்திப்பில் பலனையும் வழங்கியுள்ளார்.
தாதிஜிக்கு: அனைவருக்கும் சேவைக்கான அவர்களின் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் வாழ்த்துக்களைக் கொடுங்கள். சதா சந்தோஷ ஊஞ்சலில் ஆடியவண்ணம், நீங்கள் சதா சந்தோஷத்துடனும் வெளிப்படுத்துவதற்கான அன்புடனும் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். ஆகவே, அனைவருக்கும் உங்களின் தூய, மேன்மையான எண்ணங்களுக்காகப் பாராட்டுக்கள். சார்லி மற்றும் கென் போன்றோரினூடாக வெளிவந்த முதல் பழமான குழு, மிக நல்லதொரு பிரதியுபகாரத்தைக் கொடுக்கிறது. புதிதாக்கும் பணியை இலகுவாகச் செய்வதற்குப் பணிவு உதவுகிறது. ஒருவர் பணிவானவர் ஆகும்வரை, புதிதாக்கும் பணியைச் செய்ய முடியாது. இந்த மாற்றம் மிகவும் நல்லது. அனைவர் சொல்வதையும் கேட்பதும், அதை அமிழ்த்திப் பின்னர், அனைவருக்கும் அன்பை வழங்குவதும் வெற்றியின் அடிப்படை ஆகும். நீங்கள் மிக நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளீர்கள். புதிய பாண்டவர்கள் மிக நல்ல முயற்சி செய்துள்ளார்கள். நீங்கள் உங்களில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். எங்கும் மிக நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. இப்போது, மேலும் புதுமையை ஏற்படுத்துவதற்குத் திட்டங்களை உருவாக்குங்கள். அனைவரின் முயற்சியின் பலனாக இந்தளவு பலன் வெளிவந்துள்ளது. எதையும் கேட்பதற்கு ஆர்வம் இல்லாதிருந்தவர்கள், நெருங்கி வந்து, பிராமண ஆத்மாக்கள் ஆகியுள்ளார்கள். இப்போது, புதிய வழிமுறையிலானதொரு சேவை, வெளிப்படுத்துகைக்கான வழிமுறை ஆகும். பிராமணர்களின் ஒன்றுகூடலும் நல்லதே. சேவையின் வளர்ச்சியும் இப்போது அதிகரிக்கிறது. இந்த வளர்ச்சி ஆரம்பமாகியதும், அந்த அலை தொடரும். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் அனைவராலும் நேசிக்கப்படும் திருப்தியான ஆத்மாவாகி, ஒன்றுகூடலின் கோட்டையைப் பலப்படுத்துவீர்களாக.
ஒன்றுகூடலின் சக்தியானது விசேடமான சக்தி ஆகும். ஒரு வழிகாட்டலின் கீழ் ஒற்றுமையுடன் இருக்கும் ஒன்றுகூடலின் கோட்டையை எவராலும் அசைக்க முடியாது. எவ்வாறாயினும், இதற்கான அடிப்படை, ஒருவரோடு ஒருவர் அன்பாக இருப்பதும், அனைவருக்கும் மரியாதை அளிப்பதும், நீங்களும் திருப்தியாக இருப்பதுடன் மற்றவர்களையும் திருப்திப்படுத்துவதே ஆகும். எவரையும் குழப்பக்கூடாது. எவரும் உங்களையும் குழப்பக்கூடாது. நீங்கள் அனைவரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் ஒத்துழைப்பை வழங்குங்கள். அப்போது இந்த ஒன்றுகூடலின் கோட்டை பலம் வாய்ந்தது ஆகும். ஒன்றுகூடலின் சக்தியே, வெற்றியின் விசேட அடிப்படை ஆகும்.
சுலோகம்:
உங்களின் ஒவ்வொரு செயலும் மிகச்சரியாகவும் யுக்தியுக்தாகவும் இருக்கும்போது, நீங்கள் தூய ஆத்மா என்று அழைக்கப்படுவீர்கள்.
இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேடமான வீட்டுவேலை.
நம்பிக்கையினதும் ஆன்மீக போதையினதும் அடிப்படையில், தந்தை பிரம்மா உத்தரவாதம் வழங்கப்பட்ட விதியை அறிந்ததும், ஒரு விநாடியில் அனைத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்தினார். அவர் எதையும் தனக்கென வைத்திருக்கவில்லை. எனவே, அனைத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதே அன்பின் அடையாளம் ஆகும். எதையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதெனில், அதை மேன்மையான நோக்கத்திற்காகப் பயன்படுத்துதல் என்று அர்த்தம்.